பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : இரண்டு 1 I 7 திட்டந்தெரிந்து எடுத்து - பண்டியினின்று மொண்டு, உண்ணு - சமைத்துப் புசிக்கக்கடவா யென்பதாம். பூமிச்செல்வமாகும் தானிய சம்பத்து ஏராளமாக விருப் பினும் அவற்றை வீண்விரயஞ் செய்யாது தன் செலவுக்குத் தக்கவாறெடுத்து உபயோகித்துக்கொள்ள வேண்டுமென்னுஞ் செட்டு நிலையை ஞானத்தாய் உழுதுண்ணும் வேளாள தொழிலாளருக்கு விளக்கியுள்ளாள். 82. வானஞ்சுருங்கிற் ருனஞ்சுருங்கும். வானம் - காலமழை, சுருங்கில் - குறைந்துபோமாயின், தானம் - பூமிவளம், சுருங்கும் - தானியவிளைவு குன்று மென்பதாம். எத்தகைய பெருக்க தானிய பண்டிகள் நிறைந்திருப் பினும் ஒராண்டு காலமழை தவறுமாயின் தானிய விருத்தி குன்றி குடிகள் கஷ்டத்தை யநுபவிக்கவேண்டி நேரிடு மாதலின் வளநாடனும் தானியச்சம்பத்து நிறைந்துள்ளவன யினும் அளவறிந்து செலவு செய்யவேண்டுமென்று முன்வாசகத்திலு மொழிந்துள்ளாள். 83. விருந்திலோர்க்கில்லை பொருந்திய வொழுக்கம். விருந்து நிதம் ஒருவருடன் கலந்து புசிக்கும் புசிப்பு, இல்லார் அற்றிருப்போர்க்கு, பொருந்திய - சேர்ந்து வாழக் கூடிய, ஒழுக்கம் - நல்வாழ்க்கைத்துணை, இல்லை - அவர்களுக் குக் கிடையாதென்பதாம். அனவரதம் ஒருவருக்கு அன்னமிட்டுண்ணும் அன்பில் லாமல் லோபம் நிறைந்திருக்குமாயின் அவனை நெருங்கி யொருவனுமனுகாது வாழ்க்கைத்துனை யற்றுபோமென்பது கருத்து. 84. வீரன்கேண்மெய் கூரம்பாகும். வீரன் - யுத்தவல்லபனை கேண்மெய் - நேசித்த தேகிக்கு, கூரம்பு - சானை - தீர்த்தவேலை, ஆகும் - கையிலேந்தியுள்ளதற்கு ஒக்கும் என்பதாம்.