பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 18 க. அயோத்திதாளலப் பண்டிதர் யுத்தத்தில் வல்லமெய் யுடையோனை நேசிந்ததுள்ளவன் (கூறிய அம்பை எக்காலுங் கரத்திலேந்தி யிருக்குங்கால் எவ்விதத்துந் தன்கரத்தைக் காயப்படுத்துவதுபோல்) ஏதேனும் ஒர்நாளில் வீரல்ை உபத்திரவமடைய நேரும் ஆதலின், வீரன் கேண்மெயை விரும்பாதே யென்பது கருத்து. 85. உரவோனென்கை யிரவாதிருத்தல் உரவோன் - தேகவுரம் பெற்றவன், என்கை - யென் போன், இரவாது - மற்ருெருவர்பா லிரந்துண்ணுது, இருத்தல் - இருக்கவேண்டு மென்பதாம். அதாவது தேகத்தில் யாதாமோர் பழுதின்றி உரமாகும் பலமுற்றிருப்போன் ஒருவரையடுத்து இரந்துண்ணுது தேகத்தை வருத்தி உழைத்துண்ண வேண்டுமென்பது கருத்து. 86. ஊக்கமுடைமெய் யாக்கத்திற் கழகு. ஊக்கம் - இடைவிடாமுயற்சி, உடைமெய் - உடையவ னின்,யாக்கத்திற்கு - உருவிற்கு, அழகு - சிறப் பென்னப்படும். எத்தொழிலை யெடுப்பினும் அவற்றை இடைவிடா முயற்சியினின்று சாதித்து முடிக்கும் தேகியை சிறப்பித்துக் கொண்டாடுவதியல்பாதலின் முயற்சியின் அழகை சிறப்பித்து தேகத்தில் சிறந்தது முயற்சியுள்ள தேகமென்றும் அஃதில்லா தேகம், பூமிபாரம் என்றுங் கூறியுள்ளாள். 87. வெள்ளைக்கில்லை கள்ளச்சிந்தை. வெள்ளைக்கு - சுத்தவிதயமுள்ளார்க்கு, கள்ளச்சிந்தை வஞ்சினம், கபடு, சூது முதலிய துற்குணங்கள், இல்லை - இராவென்பதாம். குணமென்னுங் குன்றேறிய சுத்தகுணமுள்ளாரிடத்து வஞ்சினம், கபடு, சூது முதலிய துற்குணங்கள் யாவும் அணுகா தென்பது கருத்து.