பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றிஞானமாகிய மூன்ரும் வாசக முனனுரை தென்தேச பாண்டிய வம்ஸத்தைச் சார்ந்த கிள்ளிவளவன் எனும் அரசனுடைய மூதாதையாகிய சயம்பு சிற்றரசன் தனது மாளிகையை விட்டு வேணு வியாஹார அறஹத்துக்களை தரிசிக்கப் போகுங்கால் வழியே சென்று வழியே மீளாமல், திவாகர சிற்றரசனின் நந்தவனத்துட் புகுந்தான். அவ்வனத்துள் திவாகர வரசனின் குமாரத்தி தன் தோழிமாருடன் உலாவிக் கொண்டிருந்தவள் சயம்பு சிற்றரசனைக் கண்டு பிரிதியுண்டாகி யருகிலனுகிச் சென்ருள். இதனை யுணர்ந்தவன் தான் குறுக்கிட்டுச் செல்லுங் காரணங்களைக் கூறி மனமினங்காமல் வெறுத்துச் சென்ருன். இக்கோபத்தால் ராஜகுமாரத்தி சேவகரை திட்டப்படுத்தி வைத்திருந்து, சயம்புவரசன் வியாரஞ் சென்று திரும்பி யவ்வனத்துள் வந்தவுடன் பிடிக்கச் செய்து, தன் தந்தையிடம் அவனைக் கொணர்ந்து, இவனென்னை வலிய கைப்பற்றினனென்று கூறினள். அதனைக் கேட்ட மன்னன் சீற்றமுற்று இவ்விசாரிணையை மந்திரிகளால் விசாரித்து தண்டிக்க வது மதியளித்தான். பின்பு மந்திரிகள் சரிவர விசாரியாமல் சயம்பு வரசனே குற்றமுடையவனென்று, அவனைத் தண்டித்து சிறையிலிட்டு வைத்தார்கள். இவ் விவரங்களை சயம்பு வரசனின், ஏவலாளரால் உலகமாதாவாகிய ஒளவையாரெனும் அம்பிகையம்மன் அறிந்து, வெற்றிஞானம் எனும் ஒரு நூலெழுதி, திவாகர சிற்றரசனுக்கனுப்பினர். அதைப் பெற்று முற்றும் வாசித்து, தனது குமாரத்தியையும் சயம்பு மன்னனையும் தேரவிசாரித்து, தன் குமாரத்தியே துஷ்டியெனத் தெரிந்து சயம்பு சிற்றரசனுக்கு வேண திரவியமும், அம்மனு