பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : இரண்டு I 35 38. அறிவுடை யொருவனை அரசனும் விரும்பும். க2லநூற் பயிற்சியால் நீதியும் நெறியும், வாய்மெயும் நிறைந்த அறிவுடையோனே அரசனும் தேசத்தை யாளும் மன்னனும் விரும்பி கொண்டாடுவான். 39. அச்சமுள்ளடக்கி அறிவகத்தில்லா கொச்சைமக்களை பெறுதலினக் குடி எச்சமற்றென்று மிருக்கை நன்றே. கலைநூற் கற்ற விவேக விருத்தியால் மதுகுலத்தோனென வெளிதோன்ருது கல்லாக் குறையால் மதுக்களாம் விவேகி களைக் கண்டவுடன் மிருகங்க ளச்சமுற்று ஒடுங்குதல்போல் அடங்கும் பேதை மக்களைப் பெறுவதினும் எச்சமாம் புத்திரபாக்கியமற்றிருப்பதே நன்றென்பது கருத்து. 40. யானைக்கில்லை தானமுந் தருமமும். யானைக்கு யீயுங்குணமும், நன்மார்க்கமும் இல்லை யென்பது கருத்து. 41. பூனைக்கில்லை தவமுந் தயையும். பூனைக்கு ஒழுக்கமும், பரோபகாரமும் இல்லை யென்பது கருத்து. 49. ஞானிக்கில்லை யின்பமுந் துன்பதும். விவேக மிகுத்தப் பெரியோர்களுக்கு பேராசையாம் அதியிச்சையும், உபத்திரவமாந் துக்கமும் இல்லை யென்பது கருத்து. 43. சிதலைக்கில்லை செல்வமுஞ் செருக்கும். சிதலென்னுங் கறையானுக்கு திரவியசம்பத்தும், அகங்கா ரமு மில்லை யென்பது கருத்து.