பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 36 க. அயோத்திதாளலப் பண்டிதர் 44 முதலைக்கில்லை நீச்சும் நிலையும். முதலையாம் நீர் மிருகத்திற்கு நீரில் நீந்தும் செயலும், நிலைக்குஞ் செயலு மில்லை யென்பது கருத்து. 45. அச்சமும் நாணமும் அறிவிலார்க்கில்லை. விவேகவிருத்தி யில்லாதவர்கள் பெரியோர்களிடத்தில் பயமும், கெட்ட செய்கைகளில் வெழ்க்கமு மடையாரென்பது கருத்து. 46. நாளுங் கிழமையு நலிந்தோர்க்கில்லை. நல்ல நாளைப் பார்ப்பதும் நற்பலன் வேண்டுமென வாரத் தைக் கருதிப் பார்ப்பதுமாகியச் செயல்களை வியாதியஸ்தருக்குப் பார்ப்பதில் பயனில்லை. நோய்க் கண்டவுடன் சிகிட்சை செய்வதை விட்டு நாளையும் அதன் பலனையும் நோக்குவதல்ை வியாதி யதிகரித்து நோயாளி துன்பமடைவானதிலின் அக்காலத்தில் யாதொரு நாளையுங் கருதாது நோயைக் கருதி உடனுக்குடன் பரிகாரஞ் செய்யவேண்டுமென்பது, கருத்து. 47. கேளுங்கிளையும் கெட்டோர்க்கில்லை. சுருதி விசாரினையும், குடும்ப விசாரினையும் சுகநிலை கெட்டு எளியநிலை யடைந்தோர்க்கில்லை யென்பது கருத்து. 48. உடைமெயும் வருமெயு மொருவழி நில்லா. தற்காலந் தோன்றி உடைத்தாய தேகமும் மறு பிறவிக் காளாகும் தேகமும் எண்ணிய மார்க்கத்திற் சென்று நிலைக்கா தென்பது கருத்து. 49. குடை நிழலிருந்து குஞ்சமமூர்ந்தோர் நடைமெலிந்தோரூர் நண்ணினு நண்ணுவர். ஏகச் சக்கிராதிபதியாய் வெண்குடை நிழலில் யானை மீதேறி சென்றவர்களும், ஒடுங்கிக் கால் நடையில் நடப்பினும் நடப்பர் என்பது கருத்து.