பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : இரண்டு 1.37 50. சிறப்புஞ்செல்வமும் பெருமெயுமுடையோர் அறக்கூழ்சாலை யடையினுமடைவர். சிறந்த வாழ்க்கையும், திரவிய சம்பத்தும் பெரியோ ரென்னும் பெயரும் பெற்று வாழ்ந்தவர்கள் அன்னசத்திரத்திற் சேரினுஞ் சேருவர் என்பது கருத்து. 51. அறத்திடு பிச்சை கூறயிரப்போர் அரசரோடிருந்தரசாளினு மாளுவர். தருமஞ் செய்வோரிடத்துக் கையேந்தி பிச்சையிரப்போர் ஒர் காலத்தில் அரசரோடு வீற்றிருந்து இராட்சிய மாளினு மாளுவர். 59. குன்றத்தனைய நிதியை படைத்தோர் அன்றைப்பகலே யழியினுமழிவர். மலைக்கொப்பாய திரவியக் குவியலை யுடையவராயினும் அதே மத்தியானத்துள் இழந்தாலுமிழப்பர். 53. எழுநிலைமாடங் கால்சாய்ந்துக்குக் கழுதைமேய்ப் பாழாகினுமாகும். விதைமுதலும், பூமியும் ஏருங் கையிருப்பிலிருக்க அவற்றை வுழுது பயிர்செய்து சீவிக்காது தன்னை யேழையாக்கி வெளிதோன்றி வருபவன் பதருக்கொப்பாவன்.

  • [...

64. (ஈதன்றி) காலையும் மாலையும் நான்மறையோதர அந்தண ரென்போரனைவரும் பதரே. காலையிலும் மாலையிலும் நீதிநெறியமைந்த நல்வாய் மெய்களை யோதியுணராது வேஷத்தில்ை தங்களை அந்தன ரென்று கூறித்திரியும் அனைவரும் பதருக் கொப்பாவர்.

  • கிடைத்த மூலப்பிரதியில் இரண்டு பக்கங்கள் விடுபட்டுள்ளன.