பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 38 க. அயோத்திதாளலப் பண்டிதர் 65. தன்னையுந் தனது தேயமக்களையும் முன்னின் றுகாவா மன்னனும்பதரே. தனது ராட்சிய பார வாட்சியையும், தனக்குள் அடங்கி வாழும் குடிகளையும் முன்பின் ஆராட்சியினின்று காப்பாற்ருத மன்னனும் பதருக் கொப்பாவான். 66. முதலுளபண்டங்கொண்டு வாணிபஞ் செய் ததன் பயனுண்ணு வணிகரும் பதரே. திரவிய முதலைக் கொடுத்து சரக்கை வாங்கிவந்து வியாபாரத் தைப்பெருக்கி அதன் பலனைப்பெறாது வியாபாரி யெனத் தோன்றியும் வீணேய8லந்து திரிபவனும் பதருக் கொப்பாவான். 67. ஆளாளடிமை யதிநிலமிருந்தும் வேளாண்மெயில்லா வீணரும்பதரே. வேணபூமியும் ஆள் அடிமைகளுமிருந்து உழுது பயிர்செய் துண்ணும் புருஷவல்லப மற்றவனும் பதருக் கொப்பாவான். 68. தன்மனையாளைத் தாய்மனைக்ககற்றி பின்பவட்பாரா பேதையும் பதரே. தனது மனையாளை அவள் தாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டு மறுபடியும் அவளையழைக்கமாலும், அவளைக் கவனியாமலும் இருப்பனெவனே அவனும் பதருக் கொப்பாவான். 69. தன் மனையாளைத் தன் மனையிருத்தி வுன்னியே யுணரா வுலுத்தனும் பதரே. தனது மனையாளைத் தனது வீட்டி லிருக்கச்செய்து அவனுக்கு அன்னமும் ஆடையுமளிக்காது வேறு சிந்தையால் உப்புத் துாண்போல் உலுத்துப் போவோனும் பதருக் கொப்பாவான்.