பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : இரண்டு I 3 Ꮽ 70. தன் ஆயுதத்தையும் தன் கைப்பொருளையும் பிறர்கையிற் கொடுக்கும் பேதையும் பதரே. தனக்கென்றுள்ள ஆயுதத்தையும் தனது திரவியத்தையும் அன்னியன் கையிற் கொடுத்துவிட்டு விழிப்பவனும் பதருக் கொப்பாவான். 71. வாய்பறையாகவும் நாக்கடிப்பாகவும் சாற்றுவதொன்றை போற்றிக் கேண்மின் நாலின சொற்களையே மேளம்போற் பறைந்துகொண்டும் அச் சொற்களைக் கொண்டே சுட்டுத்திரியும் வகைகள் யாவற்றையும் யெடுத்துரைக்கிறேன். செவிசாயங் கோளென்று கூரலுற்ருள். 72. பொய்யுடையொருவன் சொல்வன் மெயில்ை மெய்போலும்மே மெய்போலும்மே பொய்யைச்சொல்லித்திரிவோன் அதைச் சொல்லும் வல்ல பத்தினாலும், சாதுரியத்தினுலும் மெய்யைப் போற் கூறுகின்ருன். 73. மெய்யுடை யொருவன் சொற்சோர்வதனல் பொய்போலும்மே பொய்போலும்மே மெய்யை சொல்லும்படியானவன் அவற்றை சொல்லும் வல்லபக் குறைவாலும் சொற்சோர்விலுைம் பொய்போற் றிகைப்பான். 74. (ஆதலின்) இருவர் சொல்லையு மெழுதரங் கேட்டு இருவரும் பொருந்து வுரையாராயின் மதுநெறி முறையால் வழுத்துத நன்று. நியாயாதிபதியானவன் வாதிப் பிரதிவாதி யிவர்களின் வார்தைகளை எழுதரம் மடக்கி விசாரித்து யதார்த்த மொழிகண்டு நீதியளித்தல் வேண்டும்.