பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 க. அயோத்திதாஸப் பண்டிதர் 75. மநுநெறி முறையின் வழக்கிழந்தவர்தாம் மனமறவுறுகி யழுதகண்ணிர் முறையுறத் தேவர் முநிவர்க் காக்கினும் வழிவழி யூர்வதோர் வாளாகும்மே, அங்ங்னம், மநுக்களுக்காய நியாய நெறி வழுவி கெடு நீதியுரைத்து, விடுவாயிைன், அந்நியாய மடைந்தோன் தான் அடைந்தக் கேட்டை முநிவரிடத்தேனும். தேவரிடத் தேனும் அழுது முறையிடுவாயிைன் அம்முறைப்பாடு பொய்ச் சான்று கூறியவன் சந்ததியையும், அநியாயமளித்தவன் சந்ததியையும், விடாமல் வாள்போன்றறுத்து வரும். 76. (ஆதலின்) பழியாய் வருவதும் மொழியாதொழிவதும் சுழியாய் வருபுன லிழியா தகல்வதும் துணையோடல்லது நெடுவழிபோகேல் புனைமீதல்லது நெடும்புன லேகேல் வழியே யேகுக வழியே மீளுக இவை காணுலகிற் கியலாமாறே. ஒருவர் பழிச் சொல்லை நீதிமொழியா லகற்றுவதும், சுழலிட்டு வரும் நீரோட்டத்தில் இரங்கா தகல்வதும் யாதொரு துணையுமின்றி நெடுவழிச் செல்லுதலும், யாதாமோர் ஒடத்தின் உதவியின்றி ஆறுகளைக் கடப்பதுங் கூடாது. (ஆதலின்) சரியானப் பாதையிற் செல்லுவதும் சரியானப் பாதையில் மீளுவதுமே உலகில் வாழும் விவேகிகளுக் கழகாகு மென்பது கருத்தாம். வெற்றிஞான மூலமுங் கருத்துரையும் முடிவு பெற்றது.