பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 48 க. அயோத்திதாஸ்ப் பண்டிதர் அம்பிகை, தன் தந்தை சுந்திரவாகுவையணுகி, எனதருமை தந்தையே! நமது குலகுருவா லேற்படுத்தியுள்ள பெண்களின் ஞானசங்கத்திற் சேர விருப்புற்றிருக்கின்றேன் தடை செய்யாமல் உத்திரவளிக்க வேண்டுமென வருந்தினள். அதைக் கேட்ட வரசன் மனங்கலங்கி ஞான தேற்றலடைந்த குழந்தாய்! பெண்களின் ஞான சங்கத்திற் சேரும் விருப்பம் உனக்கு பேதைப்பருவத்தி லிருக்கவேண்டும் அல்லது விவாக முடிந்து சிலகாலம் உன் புருஷனும் நீயும் சுகவாழ்க்கை கழிந்து, உன் கணவன் புருஷ சங்கத்திலும், நீ பெண்கள் சங்கத்திலும், சேரவேண்டியது தருமகட்டளை, இதைத்தவிர்த்து மங்கை பருவமுற்ற உன்னை பெண்கள் சங்கத்திற் சேர்க்கமாட்டார்களே யாது செய்யுதுமென்ருன். அம்பிகை, யரசன் முகத்தை நோக்கி என்னருமைத் தந்தையே, நீரெவ்வித முயற்சியேனுஞ் செய்து பெண்கள் சங்கத்தில் என்னை சேர்த்துவிடல் வேண்டுமென வருந்தினள். அரசன், மந்திரிப் பிரதானியரைத் தருவித்து தனது புத்திரிக்கும் தனக்கும் நடந்த விருத்தாந்தங்களை விளக்கினன். அதை யவர்கள் தீர்க்க வாலோசித்து அரசே, உமது புதல்வியின் கழுத்தில் தாய்மாமல்ை ஒர் பொட்டுக்கட்டி அறஹத்துக்களுக் கறிக்கை யிட்டு பெண்கள் சங்கத்திற் சேர்த்துவிடுவதே விதியென்ருர்கள். உடனே யரசன் அம்பிகையின் தாய்மாமன் கந்தருவத்த் தனை யழைத்து சங்கதிகள் யாவையும் விளக்கி பொன்னின லோர் பொட்டுசெய்து சரட்டிற் கோர்த்து தன் புதல்வியின் கழுத்திற் கட்டும்படிச் செய்து வெண்டு கிலாடை யுடுத்தி சமண நீத்தோர் உத்திரவுபுெற்று உமளநாட்டு வியாரத்துப் பெண்கள் சங்கத்திற் சேர்த்து விட்டான். இதுவே அம்மன் இல்வாழ்க்கை. பார்த்தன் அருளிய அம்பிகா தன்மம். திருவாளர் செல்வி தேவி யம்பிகை யருமறைப் பீடிகை யாதன முணர்ந்து போதி மாதவன் பொற்கழலேந்தி யர்திதேவியென் றறவோர்போற்றும்.