பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 க. அயோத்திதாளலப் பண்டிதர் நாளது வரையிலும் நடந்தேறி வருகிறது. இக்காலத்தில் அவளை தெய்வமாக வணங்குகிறவர்கள், அவள் கோயிலில் சிதறிக் கிடக்கும் ரத்தங்களை நாக்கில்ை நக்கி வருகிருர்களென்றும், தங்கள்சே3லயிலும் சீலையிலும் மூலை முடக்குகளிலுள்ள ரத்தத்தை ஒற்றி யொற்றி யெடுத்து அத்துணியை உருஞ்சுகிருர்க ளென்றுந் தெரிகிறது. இத்தகைய அநாகரீகத்தை தெய்வ பிராட்டியாகிய ஒளவையாரான நம்கிராம தேவிக்குச் செய்வது எட்டுனையும் பயனடையக்கூடிய வழியும் அன்பு பெருகக்கூடிய சீலமு மாகாவாம். பரம்பரையான நன்னெறி போதங்களைத் துறந்து குரும்புத்தனமான காரியங் களைச் செய்து அழிவுக்கும், மதிமயக்கத்திற்கும் ஆளாகுதல் பாரதமாதாவைப் பழிப்பதாகும். காளிகாதேவி பெயரில்தான் ஆயுதபூஜை பண்டி கையும் நடந்தேறி வருகின்றது. காளிக்குதான் பலியிட்டார்களே யொழிய, அம்பிகையம்மனுக்கல்ல வென்றினியேனும் அறிந் தொழுகக் கோருகின்ருேம். இதுவே காளியம்மன் சுருக்கக்கதை கிராம தேவிக்கு வழங்கிய பெயர்களில் காளியம்மனென்பது மொன்று. அம்பிகா தேவியின் பெயர் பெற்றவள் காளி அரசியாகும். கன்னகாபரமேஸ்வரியின் சுருக்கக் கதை அம்மன் உற்சாகத்திற் செய்யும் நல்லொழுக்க தானங்கள் தீயொழுக்க நிலைக்கு மாற்றி வைப்பதற்கு, இக்கன்னகை சரித்திரமே ஒரு ஆதரவாகக் கொண்டார்கள். எப்படி எனில், அம்பிகையம்மன் நிர்வாணத்திற்கு நெடுங் காலங்களுக்கு பின் மதுரையில் கோவலன் மனைவி கன்னகை யென்பாளின் சிலம்பில்ை கோவலனுக்கு நேரிட்ட துன்பத்தை ஆற்ருமல், அவள் தனது ஒரு புறத்து மார்பைத் திருகியெடுத்து உதிரத்துடன் அரண்மனைமேல் வீசிய சாபத்தில்ை, பத்தினி விரத கோபம் பற்றி அரண்மனை பாழடைய நேரிட்ட காலமும் அக்கோபா வேசந் தணிய ஆயிர மனிதர்களை பலியளித்தகாலமும், ஆடி மாத மாகையால், அக்காலத்தில் கன்னகையை வருஷந்தோறுஞ் சிந்திப்பவர்கள் மனித பலியைத் தவிர்த்து ஆடு மாடுகளை பலிகொடுத்ததால் அதையொரு ஆதாரமாகக்கொண்டு நெடு நிதியாகும் ஒளவையாரின் சுத்த தன்மத்திற் சேர்த்து பாழாக்கி விட்டார்கள்.