பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : இரண்டு 16 7 சிலப்பதிகாரம் காதை,23-24. கோமுறை யரைந்த கொற்ற வேந்தன் ருன்முறை பிழைத்த தகுதியுங் கேளிர் ஆடி திங்கள் பேரிருள் பக்கத் தழல் சேர் குட்டத் தட்டமி ஞான்று வெள்ளி வாரத் தொள்ளெரி யுண்ண வுறைசால் மதுரையோ டரசுகே டுறுமெனும் நிறங்கிள ரருவிப் பரம்பின் ருழ்வரை நறுஞ்சினை வேங்கை நன்னிழற் கீழோர் தெய்வங் கொள்ளுமின் சிறுகுடி யீரே தொண்டகத் தொடுமின் சிறுபறை தொடுமின் கொடுவாய் வைம்மின் னெடுமணி யியங்குமின் குறிஞ்சி பாடுமின் னறும்புகை யெடுமின் பூப்பலி செய்ம்மின் காப்புக்கடைநிறுமின் பரவலும் பரவுமின் விரவுமலர் தூவுமின் ஒருமுலையிழந்த நங்கைக்கு பெருமலை வஞ்சாது வளஞ்சுரக் கெனவே. கோவலன் மனைவி கன்னகை யென்பவளுக் குண்டான கோபாவேசத்தை யடக்குதற்கு ஆயிரங் கொல்லர்களை பலி கொடுத்து விட்டு, மதுரையில் கன்னகை பீட மமைத்து மனிதர் பலிக்கு பதிலாக ஆடு , மாடு, கோழி முதலியவைகளை பலி கொடுத்து வந்தார்கள். சிலப்பதிகாரம் காதை.27 வரி-127. கொற்கையி லிருந்த வெற்றிவேர் செழியன் பொற்ருெழிற் கொல்ல ரீரைந் நூற்றுவ ரொருமுலை குறைத்த திருமா பத்தினிக் கொருபக லெல்லை யுயிர்பலி யூட்டி. கிராம தேவதையாயிருந்து ஊர்க்குடிகளைக் காப்பாற்றும் வாக்களித்தவள் கன்னகை யல்ல. இக் கன்னகைக்குச் செய்யும் தீய வழக்கங்களை தீயர்கள்தான் கையாள வேண்டுமே யொழிய நியாயவான்கள் செய்யத் தகுந்ததல்ல. இதுவே கன்னகையின் சுருக்கக்கதை. நம்கிராம தேவிக்கு வழங்கிய பல பெயர்களில், கன்னகை யென்பதுமொன்று. அம்பிகா தேவியின் பெயர் பெற்றவள் கன்னகைப் பத்தினியாகும்.