பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

] Ꮾ 8 க. அயோத்திதாளலப் பண்டிதர் காளி என்பவளும் கன்னகை என்பவளும் தெய்வ நிலையுடையவர்களல்ல. தெய்வங்களுக்குடைய சுசீலங்கள் இவ்விரு மாதர்களுக்கு மிருக்குமாயின் இவர்களைத் தெய்வமாகக் கொண்டாட நியாய முண்டாகும். அந்நிலை இல்லாதபோது இவர்களைக் கொண்டாட நியாயமில்லை. அப்படிக் கொண்டாடு வதிலும், இவர்களுக்கு உயிர்பலி கொடுத்திருப்பதாக சரித்திரம் கூறுவதால், இவர்களும் இவர்களைக் கொண்டாடியவர்களும் மிருகத்தன்மைப் பொருந்தியவர்களென்ருெதுக்கி தெளிதலில் கூறுவனவற்றைக் கைக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளு கின்ருேம். தெளிதல். புத்த தன்மத்தைக் கைப்பிடித்து அரசு செய்த மன்னர்கள் காலத்தில் ஏதொரு விசாரணையற்ற விஷயங்களும் நடந்ததே கிடையாது. அப்படி நடந்தாலும் அதை எடுத்துரைக்க பல குருமார்களும் பல சங்கங்களும் இருந்தது. அக்காலத்தில் பெளத்த நீதிகள் விளக்கமாக எல்லா மக்களிடத்திலும் வித்தியாசமின்றி கையாடி வரப்பட்டது. அப்படி தர்மம் சிறந்திருந்த நம் மிந்திய நாட்டில், சங்கத்தைச் சார்ந்து துறவடைந்து நிர்வாணமுற்ற ஆண் மக்களை தேவர்களென்றும், பெண் மக்களை தேவிக ளென்றும், கொண்டாடி வந்தார்கள். சிலப்பதிகாரம், வாழ்த்துக்காதை பக்கம்-576, போதியின் கீழ் மாதவர்முன் புண்ணிய தானம் புரிந்த மாதவி தன்றுறவுங் கேட்டாயோ தோழி மணிமேகலை துறவுங் கேட்டாயோ தோழி. இந்திரன் தர்ம சாகூவியக்காரர்களில் ஒளவையாரைப் போல் ஒடேந்தி மடத்திற் சேர்ந்து பிசுவினி, நிலையடைந்த மாதவியின் மகள் மணிமேகலை என்பவள், நிர்வாணமடைந்து சாந்ததேவிகளில் ஒருவளாக விளங்கியபோது கம்பன் மகன் அம்பிகாபதி என்பவன் மணிமேகலா தெய்வத்தை தன் மனதினுல் சிந்தித்துள்ளான்.