பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : இரண்டு I Ꮾ 9 அம்பிகாபதி மணிமேகலா தெய்வத்தை தியானித்த பாடல். காதன் மடந்தையர் கையறுங்க காலையு மெய்யகலா மேதகுநாணு மெலியவன்ருே விழிப்போலு நெய்தல் போதவிழ்மென் மலர்ப்புன்னை யங்கானல் பொருந்துமிந்த மாதவிபெற்ற மணிமேகலை நம்மை வாழ்விப்பதே இத்தகைய பாரத தேச சத்திய தர்ம தேவிகளையும் தேவர் களையும் வணங்கியது போலவே, நம் மணிமேகலையும் கிராம தேவியாகிய இவ்வம்பிகை யம்மனை சிந்தித்துள்ளார். மணிமேகலை, காதை 14-வரி-17. சிந்தாதேவி செழுங்கலை நியமத்து நந்தா விளக்கே நாமிசை பாவாய் வானேர் தலைவி மண்ணுேர் முதல்வி யேனே ருற்ற விடர் களைவாயெனத் தான்ருெழு தேத்தித் தலைவியை வணங்கி. இவ்வகைத் தொழுகையில் சற்குருவையும், அம்மனையுஞ் சீலத்தொழுகையால் சிந்திக்குந்தோரும் புட்பங்களைக் கொண்டே யர்ச்சித்து வந்தார்கள். மணிமேகலை காதை-10 வரி 3. விரைமலரேந்தி வீசும்போடிழிந்து பொருவறு பூங்கொடி பூமியிற் பொலிந்தென வந்து தோன்றிய மணிமேகலா தெய்வ முந்தை பிறப்பெய்தி நின்ருேள் கேட்ப, சீவகசிந்தாமணி செய் - 910. தண்ணந்தீம்புன லாடியதண்மலர் வண்ணவார்தளிர்ப் பிண்டியினைடிக் கெண்ணியாயிர மேந்து பொற்ருமரை வண்ணமாமல ரேற்றி வணங்கிள்ை. சற்குரு நாதனையும், ஒளவையையுந் தாமரைப் புட்பத்தைக் கொண்டு அர்ச்சித்து வந்தபடியால் மடங்களைச் சார்ந்தக் குளங்களிலெல்லாம் தாமரைச் செடிகளே வளரவிட்டு அக் குளத்தை தாமரைக் குளங்களாக வழங்கினர்கள்.