பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 க. அயோத்திதாஸ்ப் பண்டிதர் பூர்வ பெரியோர்களெல்லாம் சீலத்தில் நிலைத்து ஞானத் தாயைப் போற்றி வந்திருக்க, இக்கால சில போலி ஜாதிகள், அம்மன் கூறிய திரி சீலமென்ற வாக்கை திரிசூலமென்றும், அம்மன் தாய்மாமல்ை இல்வாழ்க்கைக் கல்லாமல், குறிப்பு விளங்க கட்டிய பொட்டின் நற்கருத்தை மாற்றி தாய்மாமனுக்கு பெண்களை வாழ்க்கைப் படுத்தி முறை கெடுப்பதும், அம்மன் பெயர் சொல்லி, பொட்டுகட்டி கோவில் தாசிகள் என்று பெயர் வைத்து பெண்களை விபசாரிகளாக்குவதும், அம்மன் அடியார் கள் புட்பத்தால் அர்ச்சித்த காலை அம்மன் உருதெரியாமல் புட்பங்களால் மூடப்பட்டதே கரகமென்று முற்காலத்தில் வழங்கி யிருக்க, அதை இக்காலத்தில் தங்கள் ஜீவனத்திற் கிசைந்த விதமெல்லாம் மாற்றியும், கொலை, களவு, காமம், பொய், கள்ளருந்தல் முதலாய பஞ்சமா பாதகங்கள் நிறைந்த ஆண்கள் மேலும் பெண்கள் மேலும் அம்மனே வந்து ஆடி பாடி குறி சொல்வதைப் போலும் நடித்து,அம்மன் மகிமையை நாசனம் செய்து, நம் சகோதரி சகோதரர்களை யெல்லாம் கிறிஸ்து மார்க்கத்திலும் மகமது மார்க்கத்திலும் சேர்த்து வருகிருர்கள். தசபாரமிதை சக்கர முருட்டிய பூரீ புத்தர் தர்மத்தை மாறு படுத்தி மிலேச்ச வேஷ பிராமண மதத்தை நாட்டிய பராய ஜாதியோர், வஞ்சக போதத்தை யறியா பேதை மக்கள், சாந்த தேவியின் சுத்த சில மெய்யறத்தை மறந்து தாங்கள் செய்யுந் துற் கன்ம தீங்குகட்காய்த் தோன்றும் தீவினைகளைக் குறைத்துக் கொள்வதற்கும், மிருகம், பவி , ஸ்தாவர கனி வர்க்கங்களின் மேல் மாற்றி விடுவதற்கும், ஆடுகளையும், கோழிகளையு மறுத்து அம்மனுக்கு பலி கொடுத்து, முன் செய்த தீவினையுடன் ஜீவராசிகளைக் கொல்லுந் தீவினையுங் கூட்டிக்கொண்டு, தங்கள் கிராமத்தைப் பாழடையச் செய்வதுடன் தாங்களும் பாழடைந்து போகின் ருர்கள். இதை மிருகங்களே மனிதற்கு புத்தி புகட்டுவதாக நம் பெரியோர்கள் கூறியுள்ளார்கள். பெருந்திரட்டு. உங்கள் மக்களும் நீங்களும் நோய்பட எங்கள் மக்களும் யாங்களு மென்செய்தோம் உங்கள் தீவினை யோடு முதவியாய் எங்கள் தீவினை யேற்பது திண்ணமே.