பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 72 க. அயோத்திதாஸப் பண்டிதர் காரியாகிய அம்மன் புத்தரை யேந்தியது அவருடைய தர்மத்தை சிரசிலேந்தியதே. அப்படியே நம் சகோதரர்களும் அம்மனை சிரசிலேந்தில்ை அம்மனடைந்த புத்த தர்மத்தை நாமடைய வேண்டியதே காரணமாகும். ஆகையால் அன்பர்கள் அம்மன் சிரசிலேந்திய புத்த தர்மத்தை ஒவ்வொருவரும் கைக்கொள்ள கோருகிருேம். அம்மன் சரிதத்தை ஒவ்வோர் மதத்தோர்களும் மாற்றிக் கொண்டுள்ள விவரம். உலக மாதா, வானவர் முதல்வி, அம்பிகைமுதலிய பெயர்களை சிவன் மனைவிக்கும், நித்ய செல்வி, வாழ்வலங்காரி, பாக்யவதி இலக்குமி முதலிய பெயர்களை விஷ்ணு மனைவிக்கும் சரஸ்வதி,கல்விக்கரசி, ஞானத்தாய் முதலிய பெயர்களை பிரமன் மனைவிக்கும் சூட்டிக்கொண்டார்கள். அம்மன் விவாக சரித்திரம் அம்மன் ஆண்டவனைச் சுமந்த சரித்திரம் இவ்விரண்டும், மரியாள்பெயரால் மாற்றிவைத்திருப்ப தல்லாமல் காளிக்கும் கன்னகைக்கும், சில பெயர்களைச் சூட்டிவிட்டார்கள். சிலர் அம்மன் நித்திய கன்னிகையாக இருந்ததைக் கொண்டு கற்பலங்காரி என்றும், அம்மன் பானைச் சிரமேந்தி யதை பானை ஈன்றவ ளென்றும், பானை யீன்றும் கன்னிசுத்தம் கெடவில்லை என்றும் சொல்கிருர்கள். முற்காலத்தில் அம்மன் விவாக நியமனத்தை எடுத்தாண்டுக் கொண்டிருந்தவர்கள், இக்காலத்தில் வேண்டாமென்று நீக்குகிருர்கள். சிலர் அம்மனை, ஆதியென்ற பறைச்சிக்கும், பகவனென் னும் பார்ப்பானுக்கும் பிறந்தவள் பறை வள்ளுவனுக்கு தங்கை என்றும் பரிகசித்து புத்தக மெழுதி வைத்திருக்கின் ருர்கள். அம்மன் இன்னும் பல விஷயங்கள் பேசியதாகவும் செய்ததாக வும் பல பொய்க்கதைகள் படைத்திருக்கின்ருர்கள். இன்னுஞ் சிலர், பிர்மனுடைய மனையாளே! அவ்வை யாராக அவதார மெடுத்தாளென்றும், தமிழர் சங்கத்தை வென்ருளென்றும் பற்பல பொய்யாதரவுகளைப் புகுத்தியதல் லாமல் நாகைநாட்டு வேற்கண்ணி அம்மன் வியாரத்திற்கு வருடந்தோறும் வருபவர்கள் மயங்கி மாரியாற்றியவளைக்