பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : இரண்டு 17 3 காணுமல், போர்ச்சுகீயர் கொணர்ந்த மேரி அம்மாள் கோவிலில் தஞ்சம் அடைந்து பிறகு சிறுக சிறுக, ரோமான் கத்தோலிக்க வேதக்காரர்களாக மாறுபட்டு வேல்கண்ணி வியாரம் பெயரை வேளாங்கண்ணி, வேலாங்கண்ணி என்றும், நாகைநாட்டார் மாறியை சுகம் செய்த ஆரோக்கிய அம்மனை ஆரோக்கிய மரி என்றும், புறட்டிக் கொண்டார்கள். இப்படி ஒவ்வொரு வேதக்காரர்கள் காலத்திலும் மாறுபட்ட அம்மன் சரித்திரம். இக்காலத்தில் பெளத்தர்களுக்குரியதென்று துணிந்து சுதந்திரம் கொண்டுள்ள சுயமரியாதை சகோதரர்களுக்கு உள்ள ஊக்கமும் உண்மை சாதனமும், ஒங்க தாழ்த்தப்பட்ட சகோதரர் கள் உதவி புரிவார்களாயின் நம்மைக்கெடுத்து வரும் பார்ப் பனர்களை அடியோடே துலைத்து தேச தெய்வத்தையும் தேச சகோதர ஒற்றுமையையும் அன்றே பெற்று நீடுழி வாழலாம். அம்மன் துறவறத்தில் நின்று தர்மம் போதித்தபடியால், அம்மன் குருவாக விளங்கிய பேரற மகுத்துவத்தையும் தெய்வீக வாக்ய சீலங்களையும் நாம் கொண்டாடி துதிக்கவேண்டிய கடமையிருக்க இதை மறந்து திரிசீலத்தை திரிசூலமென்றும் அதற்கு காலிநூல் போடுதல் அம்மனுக்கென்று கரகம் வைத்தல், அம்மன் வந்தாளென்று ஆடு கோழியின் ரத்தங் குடித்தல், வீடு வீடாக அம்மன் பெயரில் லஞ்சம் வாங்குதல், அம்மனுக் கடிமையென்று சிறுமிகளை வீட்டில் வைத்து அவர்களால் பிழைத்தல், அம்மன் குறிச்சொல்லுவாள் என்று மனிதர்களை ஏமாற்றல், சூலம் அம்மன், மலையேறி அம்மன், துவாபர அம்மன், மாரியம்மன், காலியாட்டம்மன், காணக்கால் அம்மன், சவாரி அம்மன், முதலிய இல்லாத பொய்ப்பெயர்களைச் சூட்டி அதல்ை ஜீவிப்பதும், அம்மனுக்கு இல்லறத்தில் நடந்த பொட்டு கட்டும் கிரியையும், அவசர நிமித்தமாக தாய் மாமல்ை பொட்டுக் கட்டும் நியமன தர்மகாரியத்தின் கருத்தரியாமல், தன் குமாரத்தி போன்ற தமைக்கை குமாரத்திகளையே விவாகம் செய்து முறை பிறழ்ந்து வருவதும் அம்மனை அவமதிப்பதாகும். நம் பாரதமா தாவை மெய்யாக வழிபடுபவர் நாமாயின், அம்மன் துறவரத்தில் நின்று போதித்த உண்மையையும் அம்மன் கைக்கொண்டிருந்த புத்ததர்மத்தையும் நாம் கைப்பற்றுவதே அம்மனை துதிப்பதாகும். சகோதர சகோதரிகள், இனியேனும் நம் கிராமதேவியை சுத்த