பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 8 க. அயோத்திதாஸப் பண்டிதர் விருத்தியையும், ஈகையின் விருத்தியையும், சன் மார்க்க விருத்தியையுங் கைவிடுத்து பொய்க் குருக்களால் போதிக்கும் பொய் புராணக் கட்டுக் கதைகளை நம்பி சாமி கொடுப்பார் சாமி கொடுப்பாரென்னும் ஊக்கமற்ற சோம்பேறிகளாய் சோற்றுக்கு வழியற்று பிச்சை யிரந்துண்பதே பெரும் வித்தியா விருத்தி யென்றெண்ணிப் பாழடைவோமென்னும் வருங்கால சம்பவமுணர்ந்த ஞானத்தாய் உருக்க வலிமேயாம் ஊக்கச் செயலை வுறுதிபெறக் கூறியுள்ளாள். திரிக்குறள் தெய்வத் தாலாகா தெனினு முயற்சிதன் மெய்வருந்த கூலிதரும். அருங்கலைச் செப்பு வாழ்விப்ப தெவரென மயங்கி வாழ்த்துதல் பாழ்பட்ட தேவமயக்கு. 7. எண்ணெழுத்திகழேல் எண் - எட்டென்னுங் கணிதாட்சரமாகவும் எழுத் தென்னும் அக்ராட்சரமாகவும் விளங்கும் வரிவடிவை, இகழேல் - அவமதியாதே என்பதாம். அகர அட்சரமானது சகல வட்சரங்களுக்கும் ஆதியாய்த் தோன்றி அறிவை வளர்த்து ஞானக் கண்ணுகவும் விளங்குவது அதுவேயாதலின் அதனை அவமதியாதே என்று கூறியுள்ளாள். ஒளவையார் ஞானக்குறள் ஆதியாய் நின்ற வறிவு முதலெழுத் தோதிய நூலின் பயன் விகாரங் கெடமாற்றி மெய்யுணர்வு கண்டால் அகாரமாங் கண்டீ ரறிவு. அகரத்தின் சுழியானது அங்கத்தின் புருவமத்திய சுழிமுனையினின்று முதுகின் தண்டெலும்புள் அளாவி உந் நிதியில் முனைகூடி பூணு நூல் அணைவதுபோல மார்புட் சென்று கண்டத்தில் கால்வாங்கி நிற்கும் இதையே தாயின் வயிற்றில் குழவி கட்டு பட்டிருக்குங்கால் மூச்சோடிக்