பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி இரண்டு I 7 5. உடையதை விளம்பேல். உடையதை - உன்னிடத்துள்ள திரவியத்தை, விளம்பேல் - பிறருக்குறையாதே. இடம்பத்தில்ை உனக்குள்ள ஆஸ்தியை பிறரறியக் கூறுவாயாயின் உன்னை யொத்த திரவியவான் அவற்றைக் கருதமாட்டான். வன்னெஞ்சனுங் கள்ளனு மறிவார்களாயின் உன்னை வஞ்சித்துங் களவாடியுந் துன்பப்படுத்துவார்கள். ஆதலின் ஆட்கொல்லியாகும் உனக்குள்ள திரவியத்தை அனைவருமறியக் கூறுவாயாயின் அவ்வாட்கொல்லி யென்னுந் திரவியமே உன்னைக் கொல்லுமோராயுதமாகிப்போம். இது கொண்டே உள்ள திரவியத்தை உடன் பிறந்தானுக்கும் உரைக் கலாகா தென்பதோர் பழமொழி. உனக்குள்ள திரவியத்தை யுலகோ ரறியக்கூறி உலோபியாக விளங்கி வுன்மத்தன வதினும் உனக்குள்ள திரவியத்தைக் கொண்டு உலக வுபகாரியாக விளங்குவாராயின் உன்திரவியமும் பெருகி உன் ஆயுளும் வளர்ந்து கீர்த்தியும் அழியாமல் நிலைக்கு மென்பதாம். காக்கை பாடியம். அறநெறி நின்று வாயுளே வளர்த்து பிறருபகாரம் பேணிப் பெருக்கி நிறைமொழி மாந்தரெனு நிலை நிற்கில் துறந்தவர் கீர்த்தித் தொடர்புமீ தாமே 6. ஊக்கமது கைவிடேல். ஊக்கமது - உனக்குள்ள முயற்சியில் கைவிடேல் - சோர்வை யடையாதே. வித்தையிலேனும் கல்வியிலேனும் ஊக்கமாயிருந்து அவற்றை கைவிடுவதாயின் எடுத்த முயற்சி யீடேருமற்போம் ஆதலின் ஊக்கத்தினின்று நடாத்தியச் செயலைக் கைவிடுவ தால்ை வீண் முயற்சியேயாம். எடுத்த முயற்சியைக் கைவிடாது சாதித்துக் கைகண்ட தொழில்களாகும் இரயில்வே, டிராம்வே, டெல்லகிராம் கிராம்போன் முதலியத் தொழில்கள் யாவும் கைவிடா உளக்கத்தில்ை விருத்தி பெற்றக் காட்சிகளென்னப் படும். நாம் இத்தகைய வித்தியா விருத்தியையும், புத்தியின்