பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 க. அயோத்திதாளலப் பண்டிதர் 8. ஏற்பதிகழ்ச்சி ஏற்பது - ஒருவர் சொல்லும் வார்த்தையை விசாரினை யின்றி ஏற்றுக்கொள்வது, இகழ்ச்சி - இழிவைத்தரு மென்பதாம். அதாவது ஒரு மனிதன் முன்னில் வேருெருவன் வந்து நான் பிரமா முகத்திலிருந்து வந்தவன், நானே பெரிய சாதியென்று கூறுவாயிைன், அவன் வார்த்தையை மெய் யென்று ஏற்றுக் கொண்டு யாதொரு விசாரணையுமின்றி அவனைப் பெரிய சாதியோனென்றுயர்த்திக்கொண்டு தன்னைத் தாழ்ந்த சாதியாக வொடுக்கி சகலத்திலும் முன்னேறு வதற்கில்லாமல் ஒடுங்கி தானே சீர்கெட்டு இழிவடைந்து போகின்ருன். எவ்வகைய தென்னில்:- யதார்த்த பிராமணர் களுக்குரிய அறுவகைத் தொழிலாம் ஒதல், ஒதிவைத்தல், வேட்டல், வேட்பித்தல், யீதல், ஏற்றல் என்பவற்றுள் அந்தணர்கள் ஏற்றலும் ஒரு தொழிலாகும், அரசன் வரியிறை யேற்றலும் ஒரு தொழிலாகும். ஆதலின் இத்தகைய ஏற்பு இழிவடைய மாட்டாது. சுயப் பிரயோசன முள்ளோர் சொற்களை விசாரினையின்றி ஏற்றுக் கொள்ளுவதே இழிவைத் தருமென்பது அநுபவக் காட்சியாகும். 9. ஐயமிட்டுண். ஐயம் - புலன் தென்பட வொடுங்கி னேராகும் தென்புலத் தோர்க்கு, இட்டு - வட்டித்துள்ள அன்னத்தை முன் புசிக்கக்கொடுத்து உண் - நீயும் உண்ணுமென்பதாம். பூர்வமித்தேச மெங்கும் புத்த தர்மம் நிறைந்திருந்த காலத்தில் பாசபந்தத்திற்கையமுற்று பற்றறுக்க முயலும் சமண முநிவர்களாகும் தென்புலத்தோர் ஒருமடத்தை விட்டு மறு மடத்திற்குப் போவதியல்பாம். அவற்றை யுணர்ந்துள்ள இல்லறத்தோர் தாங்கள் புசிப்பதற்கு முன்பு வெளிவந்து, அறஹத்தோ, அறஹத்தோ என்று ஐம்புல ைெடுக்க வைய மேற்போரை அழைப்பார்கள். அவர்கள் வந்தவுடன் வட்டித்துள்ள வன்னத்தை முன்பு புசிக்கக் கொடுத்து, பின்பு தாங்களும் உண்பது. ஐயமிட்டுண்னென்னும், போதன வொழுக்கத்தைப் பின்பற்றியச் செயலேயாம்.