பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி இரண்டு 2 I சிலப்பதிகாரம். அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும் துறுவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலு மிழந்த வெண்ணையும். நீதிவெண்பா தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க லென்னுமிவ ரின்புறத்தாலுண்ட லினிதாமே - அன்பிறவே தக்கவரை யின்றித் தனித்துண்ண ருனிகமீன் கொக்கருந்த லென்றே குறி. இத்தகையாய் பாசபந்தத்திற்கு ஐயமுற்று பற்றறுக்க முயலும் பெரியோர்களுக்கு இட்டுண்பதே பேருபகார மாதலின் ஞானத் தாய் முதியோர் கருத்தைக் குறுக்கல் விகாரப் படுத்தி ஐயமிட்டுண்ணென்று கூறியுள்ளாள். 10. ஒப்புரவொழுகு ஒப்புர - உள்ளத்திற் சாந்தத்தை நிறப்பி முகமலர்ச்சியுடன், ஒழுகு - இல்வாழ்க்கையில் நடவுமென்பதாம். ஒப்புரவினின்று வார்த்தையாடலும், ஒப்புரவினின்றுண வளித்தலும், ஒப்புரவினின்று உள்ளந்திருத்தலுமே உலக சிரேஷ்டமாகக் கொள்ளுதலான் ஒழுக்கத்திற்குதவி ஒப்புர வென்று வற்புறுத்திக் கூறியுள்ளாள். விவேகசிந்தாமணி ஒப்புடன் முகமலர்ந்தே யுபசரித் துண்மெய்ப்பேசி உப்பிலாக் கூழிட்டாலு முண்பதே யமிர்தமாகும் முப்பழ மொடுபாலன்னம் முகங்கடுத்திடுவராயின் கப்பிய பசியிைேடு கடும்பசி யாகுந்தானே. ஒப்பு - மனப்பூர்வமாய், உரவோர் - அறிவு மிகுத் தோரா கும், சமண முநிவர் பால், ஒழுகு - நெறிபிருழாது வாழக்கடவா யென்பது மோர் பாடபேதம். திரிபிடகத்தையும், திரிக்குறளாம் முப்பாலையுந் தழுவியதே திரிவாசக மாதலின் நீதிநெறி வொழுங்குகளையே புதைப் பொருளாக வமர்ந்துளதாகும்.