பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 க. அயோத்திதாளலப் பண்டிதர்

11. ஒதுவதொழியேல்

ஒதுவது - அறிவைப் பெருக்குங் கலை நூற்களை வாசிப் பதில், ஒழியேல் - நீங்கிவிடாதே என்பதாம். ஒதலும், ஒதிவைத்தலும், கற்றலுங் கற்பித்தலுமாயவை கலை நூற்களே யாதலின், அவற்றை யோதுவதினின்று ஒழியேலென வற்புறுத்திக் கூறியுள்ளாள்.

அறநெறிச்சாரம்.

எப்பிறப் பாயினு மேமாப் பொருவதற்கு மக்கட் பிறப்பிற் பிறிதில்லை - அப்பிறப்பில் கற்றலுங்கற்றவை கேட்டலுங் கேட்டதன்கண் நிற்றலுங் கூடப்பெறின்.

கலைநூற்களையே கற்கவேண்டு மென்னுங்காரனம் யாதெனில் சிற்றறிவின் விர்த்தியால் வித்தியா விருத்திக ளோங்கி உலக வாழ்க்கை சிறப்படையவும், பேரறிவின் விர்த்தி யால் பூரணமுற்று சுகவிருத்தியடைவதற்குமேயாம். நுண்ணிய வறிவை விருத்தி பெறச்செய்யுங் கலைநூற்கள் ஒதுவதை ஒழியேலென்பது கருத்தாம். இதனையனுசரித்தே விவேக மிகுத்தோர் "கண்டு படிப்பதே படிப்பு மற்ற படிப்பெல்லாந் தொண்டு படிப்பென்றறி யென்றுங் கூறியிருக்கின்ருர்கள்.

12. ஒளவியம் பேசேல்.

ஒளவியம் - ஒருவருக்கொருவர் பொரு மெயையுண்டு செய்யும் வார்த்தையை, பேசேல் - மறந்தும் பேசாதே என்பதாம். உலகத்திற்ருேன்றியுள்ள மக்கள் வாழ்க்கைத் துணையாய் ஒருவருக் கொருவர். நெருங்கி வாழ்கவேண்டுமென்பது நீதிநூற் சம்மதமாதலின் அத்தகைய சேர்க்கை வாழ்க்கையில் ஒருவர்க் கொருவர், பொருமையை யுண்டு செய்யத்தக்க வார்த்தைகளைப் பேசி பொருந்தியுள்ள அன்பைக் கெடுத்து விரோதத்தைப் பெருக்கி வாழ்க்கைத் துணையைப் பிறித்துக்கொள்ளாதே என்று விளக்கியுள்ளார்.