பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : இரண்டு 2.3 அறநெறிதீபம். அவ்வியமே கூறி மிகுவன்பினிலை மாற்றுதலுஞ் செவ்விய வுள்ளத்தினிடந்தீங்கு நினைவூட்டுதலும் பவ்விப் பிறர்தாரமனைபற்றி மனமோடுதலும் கவ்விய சுணங்கன் படுங்காட்சியதன் பயனுகும். 13. அஃகஞ் சுருக்கேல். அஃகம் - எக்கால மிருந்த போதினும் குறைந்து அழியக் கூடிய தேகத்தை, சுருக்கேல் - நீயே வொடுக்கி சுகங்கெடாதே என்பதாம். தேகமானது பாலதானம், குமரதானம், அரசதானமென வளர்ந்து மூப்புதானம், மரணதான மெனத்தேய்ந்துக் குறைந்து சீர்க்கெடுவதியல் பாதலின் குமர, அரச தானங்களையே தேய்த்துக் குறைப்பதால்ை அவ்விருதானங்களையே மூப்புதான மென்னும் பெயர் பெற்று மரணத்திற் காளாக்கி விடுமென் பதாம். மக்களுக்குள்ள ஆயுள் வருடம் பதினரைப் பாலதான மென்றும், வருடம் முப்பதை குமரதான மென்றும், வருடம் நாற்பத்தைந்தை அரசதானமென்றும், வருடம் எழுபதை மூப்புதானமென்றும், வருடம் - நூற்றை மரணதான மென்றும் வகுத்திருக்கின்ருர்கள். இத்தகைய அழிவுக் குரிய ஆயுளா மஃதை குமரதானத்திலேயே குறைத்து சீர்கெடுப்பதால்ை, அக் குமரதானமே மூப்புதான நிலைப்பெற்று மரணத்திற் குள்ளாக்கு மென்பது கருத்து. அருங்கலைச்செப்பு இழிவொடுக்கப்பத்து சோற்றைக் குறைத்து சொரூபத்தை தானடக்கல் மாற்ருன் மதியென்றுணர் ஊனைச்சுருக்கி வுடம்புருக்கித் தானிருத்தல் பேணப்படுமாம் பிழை. கூற்ற னுடம்பின் குறிப் பறியாதே குறைத்தல் சீற்றச் சிறை யென்றறி நாதனெடுங்கி னனவழிந்த முற்றுறவைப் போத முணர்ந்துபுணர்.