பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 க. அயோத்திதாளலப் பண்டிதர் 14. கண்டொன்று சொல்லேல். கண்டொன்று - கண்ணிற்ை பார்த்த வொன்றைவிட்டு, சொல்லேல் - மற்ருென்றைச் சொல்லாதே என்பதாம். கண்ணிற்ை பார்த்த தொன்றிருக்கக் காணுத மற்ருென்றை சொல்லுவதானல் அதைவிடப் பெரும்பொய் வேறில்லை யென்பதாம். ஆதலின் கண்ணிற்ை கண்டதை விட்டு மற்ருென் றைக் கூருதே யென்று வற்புறுத்தி கூறியுள்ளாள். விவேகசிந்தாமணி மெய்யதைச் சொல்வா ராகில் விளங்கிடுமேலு நன்மெய் வையக மதனைக் கொள்வார் மனிதரிற் றேவராவர் பொய்யதைச் சொல்வராகிற் போஜன மற்பமாகும் நொய்யவ ரிவர்களென்று நோக்கிடா ரறிவு ளோரே. 15. ங்ப்போல் வளை. ங்ப்போல் - தன்னைப்போல, வளை - மற்றவர்களையுஞ் சூழ வாழ்க்கைச் சுகந்தருவா யென்பதாம். இல்வழ்க்கையில் தன் சுகத்தை மட்டிலுங்கருதி வளைந்து, ஏனையோர் சுகத்தைக் கருதாது அகற்றிவாழும் வாழ்க்கையில் தனக்கு சுகங்கெடுமாயின் ஏனையோர் அச்சுகக் கேட்டைக் கருதாது விலகி நிற்பார்கள் ஆதலின் இல்வாழ்க்கையில் வளையாபதியாய் நிற்றல் அவலோகிதர்கட் செயலும், சுற்றத் தோருடன் வளையும் பதியில் வாழ்தல் லோகயித செயலுமாகும். அறநெறிச்சாரம் செல்வத்தைப் பெற்ருர் சினங்கடிந்து செவ்வியராய்ப் பல் கிளையும் வாடாமற் பார்த்துண்டு - நல்ல தான மறவாத தன்மெயரே லஃதென்பார் வானகத்து வைப்பதோர் வைப்பு. விவேக சிந்தாமணி தன்மானங் குலமானந் தன்னைவந்தே யடைந்தவர்க டங்கள் மானம் என்னுகி லென்னவல்ல லெல்லவருஞ் சரியெனவே யெண்ணம் போந்து நன்மானம் வைத்தெந்த நாளுமலர் தங்களுக்கு நன்மெய்செய்வோர் மன்மானி யடைந்தோரை காக்கின்ற வள்ளலென வழுத்துவாரே.