பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 க. அயோத்திதாஸ்ப் பண்டிதர் யடைவார்களென்பது சத்தியமாதலின், சத்தியமாம் அறனை என்றும் மறவேலென்று வற்புறுத்திக் கூறியுள்ளாள். அருங்கலைச் செப்பு - அறனர் பத்து அறனன் றளித்த வாய்மெயாம் நான்கும் பிறவி கடல் கடக்கும் பேழ். 31. அனந்த லாடேல் அனந்தல் - அதிக வெள்ளப் பெருக்கத்தில், ஆடேல்-நீ நீந்தி விளையாடாதே. ஆறுகளிலுண்டாகும் பெரு வெள்ளப்போக்கில் நீந்தி விளையாடுவதில்ை, அனந்தலாம் நீர் ததும்பலிலும், சுழலிலும், சிக்குண்டு கைகால்களயர்ந்து உதவியற்று வீணே மடிவதற் கேதுவாகும். ஆதலின் அனந்தலாம் வெள்ளப்போக்கில் விளையாடலாகாதென்பது கருத்து. அனந்த னென்பதின் பொருள் - சிவன், மால், மிக்கோன், நிராயுதன், அருகனென்றுங் கூறத்தகும். அனந்த மென்பதின் பொருள் - மிகுதி, சேடமெனக் கூறத்தகும். அனந்தலென்பதின் பொருள் - நீர் ததும்பிய வெள்ளப் போக்கென்று கூறத்தகும். பாலி பாஷையில் அனந்தலென்னு மொழிக்கு வெள்ளம், பேரலை, நீர்வேக மெனப் பொருளளித்திருக்கின்ருர்கள். திரிபிடகம், திரிக்குறள், திரி மந்திரம், திரிகடுகம், திரிவாசக முதலிய நூற்கள் யாவற்றிலும் பாலி மொழிகளே மிக்க மலிவுள்ளது கொண்டு, அனந்த லென்னு மொழிக்கு வெள்ள மென்னும் பொருளை விவரித்துள்ளோம். அனந்த லென்பதற்கு நித்திரை யென்னும்பொருட் கூறுவாராயின், அனந்தலாடெலென்னும் வாக்கியத்திற்கு நித்திரை விளையாடாதே யென்னும் பொருளைத்தரும். அங்கன மின்றி அதிநித்திரை செய்யாதே கொஞ்ச நித்திரை செய்யென்னும் பொருள் மொழிக்கு முற்றும் பேதமேயாகும்.