பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : இரண்டு 3.3 நல்லம் யாமென்னு நடுவுநிலையாமெய்க் கல்வி யழகே யழகு. முகத்தழகு, அகத்தழகு மயிரழகு யாவும் வெயில் பூர்க்கும் மஞ்சள் போலும், புல்நுனி நீர்போலும் மறைவது திண்ண மாதலின், எத்தே சத்துள்ளோருங் கண் குளிர வாசித்துணர வேண்டிய அழகு, எக்காலு மழியா உண்மை யுணர்த்தும். மெய்க்கல்வியாம் கலைநுாற்களி னழகே மிக்க சிறப்புற்ற தாதலின், அத்தகைய வழகினை உலகோர்க்கு சிறக்கச் செய்யாது அழகலாதனவற்றைச் செய்தல் வீணே யென்பது கருத்தாம். 29. இளமெயிற் கல். இளமெய் - தேகம் இளர்தையாம் பச்சை பருவத்திலேயே, கல் - கலை நூற்களை உள்ளத்துணர்த்து மென்பதாம். பச்சை பருவத்தினின்று பாலப்பருவம், குமரப்பருவம் வளருவதுபோல் கல்வியாகிய கலைநூல் கற்றலாம் கலையென் னும் சந்திரன் நான்காம்பிறை, ஐந்தாம்பிறையென வளர்ந்து பூரண சந்திரனென்பது போல், தேகம் வளரும்போதே கலைநுாற்களாம் நீதி நூற்களின் பழக்கத்தால் சிற்றறிவென்னும் பெயரற்ற பேரறிவு வளர்ந்து பூரணம் பெறுவானென்னும் அன்பின் மிகுதியால் இளமெயாம் பச்சை பருவத்திலே கலைநுாற்களைக் கல்லென்று கூறியுள்ளாள். 30. அறனை மறவேல் அறனை - அறவாழிக் கடவுளாம் புத்தபிரானை, மறவேல் - என்றும் மறவாதே யென்பதாம். புத்தபிரான் புவியில் உலாவிய காலத்தில் தன்னைத் தொழுவுங்க ளென்ருயினம், தன்னை மறவாதிருங்க ளென்ரு யினும் அவர் நாவினர் கூருதிருக்க, நமது ஞானத்தாய் ஒளவையார் மட்டிலும் அறனை மறவாதிருங்கோ ளென்று கூறியக்காரணம் யாதென் பீரேல் அறனை சிந்திக்குங்கால் அறன் மொழிந்த பொருள் முற்றுஞ் சிந்திக்க யேது உண்டாகும். அத்தகைய சிந்தன முயற்சியால் உண்மெய்ப் பொருள் விளங்கி துக்க நிவர்த்தி யுண்டாகி சுகவாரியென்னும் நிருவானத்தை