பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 க. அயோத்திதாளலப் பண்டிதர் பதார்த்த சிந்தாமணி பல பல வெப்பம் போகும் பற்றிய மேககாங்கை குலவரை தோன்று மேகங் குட்டத்தின் தினவுபாலர் மல பந்தங் குமரம் நீங்கும் மன்மத நிலையுமுண்டாம் இலவ மெத்தைப் பதிந்த வில்லறமக்கட் கென்றும். 27. வஞ்சகம் பேசேல். வஞ்சகம் - உள்ளத்திற் கெடு எண்ணத்தை வைத்துக் கொண்டு வெளிக்கு நல்லவன் போல், பேசேல் - பேசாதே யென்பதாம். அத்தகைய வஞ்ச நெஞ்சமுள்ளவன் உலகத்தில் எவ்வகையாய் உலாவுவானென்னில் நஞ்சுள்ள பாம்பானது தனக்குள்ள நஞ்சுட மெயறிந்து மற்றவர்களுக்கு பயந்து வொளிப்பது போல வஞ்ச நெஞ்சனும் மற்றவர்களுக்கு பயந்துலாவுவான். அறநெறிச்சாரம் தன்னைத்தன் நெஞ்சங் கரியாகத் தானடங்கின் பின்னைத்தா னெய்தா நலனில்லை - தன்னைக் குடிகெடுக்குந் தீநெஞ்சிற் குற்றேவல் செய்தல் பிடிபடுக்கப்பட்ட களிறு. 28. அழகலாதன செயேல். அழகு - அந்நியர் கண்களுக்கு ரம்மியமும், மனேசம் மதமும், அலாதன - இல்லாதவற்றை, செயேல் - என்றுஞ் செய்யாதே யென்பதாம். அதாவது ஒர் காரியத்தை யெடுத்துச் செய்யுங் கால் அக்காரியமானது தனக்கு சுகத்தையும், நற்கீர்த்தியையுந் தருவதுடன் ஏனையோர் கண்களின் பார்வைக் கழகாவும், இதயத்திற்கானந்த மாகவும் விளங்கவேண்டுமென்பது கருத்து. நாலடி நாநூறு குஞ்சியழகுங் கொடுந்தானைக் கோட்டழகு மஞசளழகு மழகல்ல - நெஞ்சத்து