பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : இரண்டு 3 I 25. அரவமாட்டேல் அரவம் - சீரலுள்ள விஷப் பாம்புகளை, ஆட்டேல் - மற்றவர்கள் மிரளுவதற்காக விளையாடிக் காட்டாதே யென்பதாம். துஷ்டர்களின் சவகாசமும், குடியர்களின் இணக்கமும், பாம்புகளின் பழக்கமும், எவ்வகையானுந் துன்பத்திற் காளாக்கி விடும். ஆதலின் கெட்டவஸ்து வென்றறிந்தும் அதனுடன் பழகுதலும் எவ்வகையானு மோர்கால் தனக்கும் பிறருக்கும் துன்பத்தை விளைவிக்கு மென்றறிந்த ஞானத்தாய் விஷ ஜெந்துக்களைக் கொண்டு பிறர் பயப்படுவிதமாய் விளையாட் டுக் காட்டாதே. அது கொடு வினையாய், முடியுமென்று வற்புறுத்திக் கூறியுள்ளாள். விவேகசிந்தாமணி அரவினை யாட்டு வாரு மருங்களி ருட்டுவாரும் இரவினிற் றனிப் போவாரு மேரிநீர் நீந்து வாறும் விரை செரி குழலியான வேசையை விரும்புவாரும் அரயனைப் பகைத் திட்டாரு மாருயிரிழப்பர் மாதோ. 26.இலவம்பஞ்சிற்றுயில் இலவம் - மிகு மிருதுவாம், பஞ்சில் - பஞ்சி மெத்தையில், துயில் - நித்திரை செய். பருத்திப் பஞ்சு, பனைப் பஞ்சு, இலவம் பஞ்சு யென்பவற் றுள் இலவம் பஞ்சே மிக்க மிருது வானதும், சுகுணமுள்ளது மாதலின் இலவம்பஞ்சு மெத்தை யிற்றுயிலென்று கூறியுள்ளர்ள். அதன் சுகுணமோனெனில் பற்பல உஷ்ண ரோகங்கட் போம், மேக காங்கையாற் குடும்பப் பரம்பரையிற் ருேன்றும் மதுமேகம்போம், குட்டரோகத்தாலுண்டாம் நமைகள்போம், குழவிகளுக்குக் கானும் மலபந்தங் குறைவுபடும், குமரகண்ட வலிபோம். தாது விருத்தி யுண்டாகும். ஆதலின் பொதுவாய் சுகங்கருதி இல்வம் பஞ்சிற்றுயிலென வற்புறுத்திக் கூறியுள்ளாள்.