பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 க. அயோத்திதாஸப் பண்டிதர் கம்பர் ஏறெழுபது பருவத்தே கார்த்துநிலம் பண்படுத்தி பயிர்செய்து உருவத்தா லாயபயன் வுழுதுபயிர் செய்தளிக்கும் பருவத்தான் வேளாளன் பக்குவத்தா லுலகோம்பும் திருவத்தான் கோலத்தையும் தேற்றுங்கோல் தாக்கோலே 23. மண்பறித் துண்ணேல் மன்றுபறித் துண்ணேல் என்பது மற்றுமோர் ஒலப்பிரிதி மூலபாடம். மண் - அன்னியனுடைய பூமியை, பறித்து - அபகரித்து உண்ணேல் - அதில் விளைபொருளை புசியாதே யென்பதாம். மன்று - அன்னியப் பொருளை, பரித்து - அவர்களை யறி யாது வவ்வி, உண்ணேல்-புசியாதே யென்பது மற்றும் பாடம். இவ்விரண்டு வாசகங்களும் அன்னியனுடைய பொருளையோ, அவனது பூமியையோ, அவனை யறியாத மோசத்திலுைங் களவிலுைம் அபகரித்துண்பது அக்கிரம மாதலின் சுத்த தேகத்தை சோம்பலினலும், களவிலுைம், வஞ்சினத்தாலும் வளர்க்காதேயென்பது கருத்து. மேறு மந்திர புராணம். தானத்திற் குறித்து மன்று தன் கிளைக் கீயற் சால வீனத்து ளுய்க்கு நிற்கு மெஞ்சத்தை யிழக்க பண்ணும் மானத்தை யழிக்குந் துய்க்கு மற்றவர்க் கடிமை யாக்கு மூனத்து கரகத்துய்க்கும் பிறற் பொருளுவக்கின் மாதோ. 24. இயல்பலாதன செயேல். இயல்பு - தன்னளவில், அலாதன - செய்யக் கூடாத வற்றை, செயேல் - நீ செய்யாதே யென்பதாம். அதாவது தன்ன லியலாததும், தான் முன் பின் பாராததும், தன் அநுபவத்தில் வராததுமாகியச் செயலைச் செய்வதானால் தேகத்தைக் கஷ்டப்படுத்துவதன்றி திரவியத்தை யும் நஷ்டப்படுத்தி விடுமென்றுணர்ந்து ஞானத்தாய் இயல்பில்லாதச் செயலை செய்யே லென்று கூறியுள்ளாள்.