பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : இரண்டு 29 அறநெறி தீபம். அன்னைபிதா சுற்றத்தை யன்புமிக காப்பதுவும் பின்னமற பெற்ருேரைப் பிழை யணுகாதோம் புதலும் தன்மகவுந் தானுமிகு சன்மனமா வாழ்க்கை பெறுங் கன்ம மதாம் நற்கரும காட்சியதன் பயனுகும். 21. நன்றி மறவேல். நன்றி - ஒருவர் செய்த நல்லுதவியை, மறவேல் - என்றும் மறவாதே யென்பதாம். சகலராலும் இஃது நல்லுதவி, நற்பேதம், நல்லிகை யென்று கூறும் நன்றியென்னுஞ் செயலால் சுகம் பெற்றும், அச்சுகத்தையளித்தோன் செயலை மறப்பதாயின் மறுசுகமடை வதற்கும் அவனிடம் செல்லுவதற்கும் சங்கை, முன்செய்த நன்றியாம் உதவியை மறந்தவனச்சுதே மறுபடியு மிவனுக்குதவி புரியப் போமோ? வென்று மறைவான். அதுபோல் ஒருவர் செய்த உதவியை உள்ளத்திலுன்றி செய் நன்றியை மறவாதிருத்தலால் அந்நன்றியே ஏனையோருக்கு நன்னன்றியருளி உள்ளக் களங்கம் நீங்கி சதாநந்தத்தைய னுபவிப்பார்களென்பது கருத்து. திரிக்குறள் நன்றிமறப்பது நன்றன்று நன்றல்ல தன்றே மறப்பது நன்று. 22. பருவத்தே பயிர் செய். பருவத்தே - அந்தந்த தானியங்கள் விதைக்கக்கூடிய காலங்களுக்குக் காத்திருந்து, பயிர் - தானிய வளைவை, செய் - விதைக்க வேண்டுமென்பதாம். காரணம் கைப்பொருளுண்டாயின் வேண்டியபோது தானியங்களை வாங்கிக் கொள்ளலாம். ஆனல் வேண்டிய போது பருவமென்னும் விளைவுக்குத் தக்கக் காலங்களை வாங்க வியலாது. ஆதலின் பூமியைத் திருத்தி பயிரிடும் ஒவ்வோர் வேளாளனும், பயிர்களை விளக்ககூடிய காலங்களே எதிர்பார்த்திருந்து விளைவிக்க வேண்டுமென்பது கருத்து.