பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 க. அயோத்திதாவப் பண்டிதர் துற்குணமுற்ற குடும்பத்தையேனும் நேயனையேனும் அடுத்து சேர்வோமாயின் அவர்களுக்குள்ள துற்குண்ச் செயல்களே நம்மெயும், நம்மெய் அடுத்தோர்களையும் பற்றி நாசத்திற்குள்ளாக்கிவிடும். அவரவர்களின் குணு குணங்களை நற்குண முற்ருேர் குடும்பத்தையேனும், நேயனையேனும் அடுத்து சேர்வோமாயின் அவர்களுக்குள்ள நற்குணச் செயல்களே நம்மெயும், நம்மெயடுத்தோர்களையும் சுகம்பெறச் செய்யும். விவேகசிந்தாமணி கற்பகத் தருவைச் சார்ந்த காகமு மமிந்த முண்ணும் விற்பன விவேக முள்ள வேந்தரை சேர்ந்தோர் வாழ்வார் இப்புவி தன்னி லென்று விலவு காத்திடு கிள்ளைப் போல் அற்பரைச் சேர்ந்தோர் வாழ்வ தரிதரி தாகு மம்மா. 20. தந்தை தாய்ப் பேண். தந்தை - தகப்பனையும், தாய் - அன்னையையும், பேண் - பாது காப்பா யென்பதாம். நாம் மதலைப்பருவத்தி லிருக்குங்கால் பசியரிந் தமுத மூட்டியும், ஈ எறும் பணுகாது பாதுகாத்தும், அன்ன மூட்டியும், வித்தியா விர்த்தியைக் காட்டியும், சீர்பெறச் செய்தவர்க ளாதலின், அவர்கள் உபகாரத்தை என்றும் மறவாது யாதாமோர் தொழில் செய்வதற்கு மேதுவின்றி, தடியூன்றி தள்ளாடி கண் பஞ்சடைந்து, பாலுங் கடைவாய்ப்பட்டு மூப்புதான முற்றக்கால் அவர்களுக்கு வேணவமுதுாட்டி யாதோர்க்குறைவுமின்றி, அதியன்பு பாராட்டி பாதுகாத்தல் வேண்டும், அத்தகையப் பாதுகாத்த பிற்பலன் தன் மக்களால் தானநுபவித்தற்கூடும். தன் மக்களைத் தான் மிக்க வன்புடன் காப்பாற்றுவது போல் தன்னையும், தன் தாய் தந்தையர் காப்பாற்றி யிருப்பார்க ளென்றுணர்ந்து அவர்கள் மூப்பு காலத்தில் யாதொரு கவலையும் அணுகவிடாமல் போவிக்க வேண்டுமென்பது கருத்து.