பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 க. அயோத்திதாஸப் பண்டிதர் அறநெறித்தீபம். பொய்யகற்றி மெய்ப்புகலும் போதரடி போற்றுதலும் வையத்தோ ரென்றுமிகு வாழ்த்தி சுகமேற்றுதலுந் துய்யனென சீவனெலாந் தொண்டு நிலை யாற்றுதலும் உய்யுமுடல் வாக்கு மனக் காப்பதனின் பலகுைம். 34. கிழமெய்ப் படவாழ் கிழமெய் - அறிவு முதிர்ந்தோன், பட என்று சொல்லும் படியாக, வாழ் - உன் வாழ்க்கையை சீர்பெறச் செய்யு மென்பதாம். அறிவு மிகுந்த ஞானிகளையே கிழவரென்றுங் கிழமெய் என்றும் கிழமெய்யரென்றும், மூத்தோரென்றும், முத்த ரென்றும், அறநூற்கள் முறையிடுகின்றபடி யால் நமது ஞானத்தாயும் கிழமெய்ப்படும் வாழ்க்கையால் முத்தகைக் கடவாயென்று வற்புறுத்திக் கூறியுள்ளாள். கிழமெய் யென்பது முதிர்ந்தோர், மூத்தோர் மிக்கோ ரென்னும் பொருட்களின் அதாரங் கொண்டு புத்தபிரானையுங் கிழவனென்றே வழங்கி வந்தார்கள். சூளாமணி ஆதியங் கடவுளே யருமறை பயந்தனை போதியங் கிழவனை பூமிசையொதிங்கினை போதியங் கிழவனை பூமிசை யொதிங்கிய சேதியென் செல்வனின் றிருவடி வணங்கினம். குடி வாரம் - நிலவார மென்பதும், குடிக்கிழ மெய் நிலக் கிழமெயென்பதும், ஒர் பலனைக் குறித்த மொழிகளாகும். அப்பலன் பிரிதி பலனைக் கருதாதீயும் பரோபகாரப் பலயுைளதேல் அத்தேகியை கிழவன், மூர்த்தோன், மூப்பன் என்னுஞ் சிறப்புப் பெயராலழைத்து வந்தார்கள். இதை யனுசரித்து நமது ஞானத்தாயும் உனது வாழ்க்கையிற் கிழமெய்ப்பட வாழ்கவென்று வற்புறுத்திக் கூறியுள்ளாள்.