பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : இரண்டு 37 35. கீழ்மெ யகற்று கீழ் - தாழ்ந்த செயலுக்குரிய, மெய் - தேகியென்று சொல்லுதற்கிடங்கொடாது, அகற்று - நீங்கி நில்லென்பதாம். அதாவது உனது உருவை மற்ருெருவன் கண்டவுடன் ஆ! இவன் வஞ்சகன் குடி கெடுப்போன், பொருளாசை மிகுந்தோன், கள்ளன், கொலையாளி, குடியன், வியபசார மிகுத் தோன், பொய்யன் கீழ்மகன் இவனென, உன்னை மற்ருெருவன் அகற்றுதற்கிடங்கொடாது நீயே யக்கீழ்மகன் செயற்களை யகற்று மென்னுங் கருத்தை கீழ் மெய கற்று மென்று முன்னிட்டுக் கூறியுள்ளாள். கீழ்மக்கள், மேன்மக்களென்னும் பெயர்கள் இத்தகையச் செயல்களால் தோற்றியவைகளேயாம். வளையாபதி - தீவினையச்சம் கள்ளன்மின் களவாயின யாவையுங் கொள்ளன் மின் கொலை கூடி வருமற மெள்ளன் மின்னில ரெண்ணியாரையு நள்ளன்மின் பிற பெண்ணுேடு நண்ணன்மின். 36. குணமதுகை விடேல் குணம் - உமக்கு தோற்றிய சுகம், அது - அதிலைாய தென்றறிந்துக் கொள்ளுவாயாயின், கைவிடேல் - அவற்றை நழுவவிடாதேயென்பதாம். அதாவது நீவீர் புசித்த அவுடதத்தில்ை வியாதி நீங்கி வருங்குணத்தை சுக நிலையிற் காண்பாயாயின் அதை கைவிடா மற் புசிப்பாயாக. புசித்துவரும் பதார்த்தங்களில் சுகநிலை தோற்று குணமுண்டாயின் அவற்றையுங் கைவிடேல். நீவிர் ஆதுலர்க்களிக்கும் அன்னதானத்தாலும், அறஹத்துக் களிக்கும் போஷிப்பிலுைம், அன்னியரைக் காக்கும் ஆதரவிலுைம் உமக் குண்டாய சுகுண நிலையாம் உற்றச் செயலைக் கைவிடேல். உம்மால் மற்றவர்களுக்குப் போதிக்கும் நற்போதக விருத்தியால் தாமு மப்போது நிலையினின்று சொற்குணங் காண்பீராயின் அவற்றையுங் கைவிடேலென் பதாம். தனக்கும், பிறருக்கும், சுகுண முண்டாகச் செய்தல் நியாயகுணமும், தனக்கும் பிறருக்கும் அசுகுண முண்ட ரகச் செய்தல் தீயகுணமு மாதலின்