பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி இரண்டு 39 தனக்குள் தோன்றுங் கெடு எண்ணத்தின் விரிவே தன்னுள் ளத்திற் கொதிப்பேற்றி சுடுவதுடன், தன்னை யறியா மலே வாழைப் பழத்திலே ஊசி நுழைவதுபோல் நுழைந்து கெடுத்துவிடும். தன் சுகத்தை நாடு கிறவன் எதிரியின் சுகத்தையுங் கோறல் வேண்டும். அங்ங்னமின்றி தன் சுகத்தை நாடி எதிரியின் சுகத்தைக் கெடுப்பதாயின் அக்கேட்டின் பலனே தனக்குங் கேட்டை யுண்டு செய்யுமாதலின் கெடுப்ப தொழி யென்னும் வாசகத்தை சுருக்கிக் கூறியுள்ளாள். பட்டினத்தார் இருப்பது பொய் போவது மெய்யென் றெண்ணி நெஞ்சே யொருத்தருக்குந் தீங்குநினை யுன்னதே - பெருத்த தொந்தி நம்மதென்று நாமிருக்க நாய் நரிகள் பேய் கழுகு தம்மதென்று தாமிருக்குந்தான். 39. கேள்விமுயல். கேள்வி - உனது செவிகளால் அறநெறி வாக்கியங்களைக் கேட்பதற்கு, முயல் - முயற்சியிலிரு மென்பதாம். பூர்வம் வரிவடிவாம் அட்சரங்களில்லாத காலத்தில் புத்த பிரானல் போதித்த திரிபேத வாக்கியங்களென்னும் திரிபீடமாம். சப்ப பாபஸ்ள அகரணம், குஸ்லஸ் உபசம்பதா, சசித்த பரியோதபனங், என்னும் பாபஞ் செய்யாதிருங்கள். நன்மெய்க் கடைபிடியுங்கள் உங்கள் இதயத்தை சுத்தி செய்யுங் கோளென்னும் மூன்று பேதவாக்கியங்களையே ஒருவர் சொல் லவும் மற்றவர்கள் கேட்கவுமாயிருந்தபடியால் சுருதியென்று வழங்கிவந்தார்கள். இத்தகைய நீதி நெறிகளமைந்த சுருதி மொழிகளைக் கேட்டலும், அதின் அந்தரார்த்தங்களை சிந்தித்தலும், தான் சிந்தித்துணர்ந்த வற்ருல் தெளிதலும், அத்தெளிவால் துக்க நிவர்த்தியடைதலுங் கொண்டு, வரிவடிவ அட்சரங்களுள்ள சகடபாஷையாம் சமஸ்கிருதமும் திராவிட பாஷையாந் தமிழும், புத்தபிரானலியற்றி அவர் போதித்துள்ள நீதி நெறிகள் யாவும் அட்சரவடிவிற் பதிந்துள்ள போதினும் செவிச் செல்வமாங் காதுகளிற்ை கேட்டுணர்வதே தெளிவாதலின் ஞானத்தாயுங் கேள்வி முயலென்று கூறியுள்ளாள்.