பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 க. அயோத்திதாஸப் பண்டிதர் திரிக்குறள் செவியிற் சுவையுணரா வாயுணர் வின்மாக்க ளவியனும் வாழினு மென். பொருள் சம்பாதிக்கும் உபாயத்தைக் கருதி பொய் சொல்லி வஞ்சிக்கும் அஞ்ஞான குருக்களின் கேள்வியில் முயலாமல் பொருளாசையற்று கண்டிறப்பான நீதிநெறிகளைப் புகட்டும் மெய்ஞ்ஞான குருக்களின் கேள்வியில் முயல வேண்டுமென்ப்து கருத்தாம். 40. கைவினை கரவேல் கைவினை - உனது கைத்தொழிலாஞ் செயலை, கரவேல் - கை சோர்ந்து பின்னடையச் செய்யாதே என்பதாம். அதாவது, கைவினையாம் செய் தொழிலில் மேலும் மேலும் அறிவினை விருத்தி செய்து முன் செய்யும் பொருளினும் பின் செய்யும் பொருட்கள் சிறப்புப் பெற்றே விளங்கல் வேண்டும். அங்ங்னமின்றி கைவினையாம் செய்தொழிற் பொருட்கள் முன்பு செய்தவற்றினும் சிறப்புக் குன்ற தோற்றுமாயின் அப்பொருள் நாளுக்கு நாள் சிறப்புக்குன்றுவது மன்றிசெய் தொழிலாங் கைவினையுங் கரந்து பாழடைந்து போம். ஆதலின் செய்தொழிலை நாளுக்கு நாள் சிறப்படையச் செய்ய வேண்டுமேயன்றி ஒளித்து கரவேலென்று கூறியுள்ளாள். 41. கொள்ளை விரும்பேல் கொள்ளை - பொருட்கொடுத்து கொள்ளாத பொருளை, விரும்பேல் - நீ ஆசைவையாதே என்பதாம். முதலீய்ந்து கொள்ளாதப் பொருளே கொள்ளை யென்று கூறப்படும். அத்தகையாய் கொள்ளை கொடுத்தோன் மனங் குமரவும், தேகம் பதரவும், அவன் பொருளை விரும்புவதில்ை விரும்பினேன் பொருளை அவனையறியாது மற்ருெருவன் கொள்ளைக் கொள்ளுவானென்பது அநுபவமாதலின் அன்னியற் பொருளை யபகரிக்க விரும்பாதே யென்பது கருத்தாம்.