பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 க. அயோத்திதாஸ்ப் பண்டிதர் காக்கை பாடியம் முத்திர மாய்ந்த மூதறிவாளர் குத்திரமிய்யுங் கோடுரையாது சித்திரங்கூறி சீரழியார்க ளெத்திரத்தாலு மெய்துவர் வீடே. 46. சீர்மெய் மறவேல் மெய் - தேகத்தை, சீர் சுத்தி செய்யும் விஷயத்தில், மறவேல் - ஒருக்காலும் மறவாதே யென்பதாம். சீர்மெ யென் பதி னிலக்கணம் மெய் சீராதலின் புறமெய்ச் சீராம் தேகச் சுத்திகரிப்பால் தெளி நிலையும் விவேக விருத்தியு முண்டாவதன்றி இதயசுத்தத்திற்கும் ஏதுவுண்டாகும். அத்தகைய விதயசுத்தத்திலேயே சகல சுகமும் விளங்குகிற படியால் அவற்றிக்கு மூலகாரணமாம் புறமெய்ச்சீரென்னும் சீர்மெயாதலின் தேக சுத்தத்தை திடம்பெறக் கூறியுள்ளாள். பிரிட்டீஷ் ஆட்சியோராய் நமது தேசத்தை யரசாண்டு வரும் ஆங்கிலேயர்கள் வெண்மெய் நிறத்தால் சுத்த தேகிகளாகும். எக்காலுந் தங்கள் தேகத்தை சுத்திகரிப்பவர்களா கவும், சுத்த உடையை யுடையவர்களாகவுந் தோன்றியபடியால், அவர்களை சீர்மெயர், சீர்மெய்யோரென்று இத்தேசத்தோர் வழங்கிவந்த வார்த்தையைக் கொண்டு, இவர்கள் காணுத வைரோப்பாதேசத்திற்கும் சீர்மெ யென்னும் பெயர் வாய்த் திருப்பதை தேக சுத்த தோற்றமாம் சீர்மெயென்றே தெளிந்துக் கொள்ளலாம். அருங்கலைச் சேப்பு - உள்ளொளி பத்து. சீர்மெயதாகி சுகங்கெடா சுத்தத்தாற் றுாய்மெயதா முள்ளொளி. 47. சுளிக்கச் சொல்லேல். சுளிக்க ஒலிக்கும் வார்த்தை பிறருக்குப் புலப்படாமல், சொல்லேல் - பேசாதே யென்பதாம்.