பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : இரண்டு 45 அதாவது பேசும்வார்த்தைகளை சுழித்து சுழித்து உள்ளுக் கொன்றும் வெளிக்கொன்றுமாக பேசுதலினும் பேசாதிருப்பது சுகமாதலின் பேசும் வார்த்தைகளை பூர்த்தியாக வெளியிடாது உள்ளுக்கே சுளித்துப் பேசலாகாதென்பது கருத்தாம். முகசுளிப்பால் வாக்குச்சுளிப்பும் வாக்குச் சுளிப்பால் அகச் சுளிப்பாம் வஞ்சநெஞ்சத்தின் நஞ்சு விளங்குகிறபடியால் அந்நஞ்சின் விஷமீறி இதயகோசத்தைக் கெடுப்பதுமன்றி தேகமும் பாழடைவதற்கு சுளிப்பே ஒர் மூலமாதலின் வஞ்சத்தை நெஞ்சிலுான்றி சுளிக்கச் சொல்லேலென்பது உட்கருத்தாம். 48. சூது விரும்பேல். சூது ஒருவரை வஞ்சித்தும் குடி கெடுத்தும் தாய்ை கெடுங்கரவடைச் செயலை, விரும்பேல்-நீ யெப்போதும் ஆசை வையாதே என்பதாம். அதாவது தான் வேறுதொழில் யாதுமின்றி மற்ருெருவன் பொருளை வஞ்சகவிளையாட்டையாடி பறிப்பதும் சூதென்னு மோர் தொழிலையே நெஞ்சிற் குடிகொளச்செய்வதுமாகிய அத்தீயவிளையாட்டையே மிக்க விரும்பி தானுங் கெடுவதுடன் மற்றவர்களையுங் கெடுத்து பாழ்படுத்துகிறபடியால் வஞ்சித்துக் கெடுக்கும் சூதை விரும்பேலென்பது கருத்தாம். காக்கை பாடியம். கோதுட்டுளமே குலநல மழிக்கும் வாதிட்டார்ப்ப வாழ்க்கையிங் குன்றும் சூதுற்ருடல் சூழ்கிளே யழிக்கும் போதித்தானப் பொக்கிடம் போற்றீர். 49. செய்வன திருந்தச் செய். செய்வன - நீ செய்யவேண்டிய காரியங்களை, திருந்த - சீர்பெற, செய் - செய்யவேண்டுமென்பதாம். அதாவது தானெடுத்து முடிக்கவேண்டிய காரியாதிகள் யாவும் சகலருக்கும் - உபயோகமாகக் கூடியதாகவும் சகலருங் கொண்டாடுவதாகவுமிருத்தல் வேண்டும். அங்ங்னமின்றி