பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 க. அயோத்திதாஸ்ப் பண்டிதர் யெடுத்த காரியத்தை திருத்த முடிக்காது குறைந்தழியுமாயின் தனக்கு வதிகக் கஷ்டமுண்டாவதுடன் பொருளும் நஷ்ட முண்டாகிக்கெடும். ஆதலின் எத்தகயை காரியங்களைச் செய்ய முயன்ற போதிலும் அவற்றைத் திருந்தச் செய்வதே அழகாகும். 50. சேரிடமறிந்து சேர். சேரிடம் - இஃது சேரக்கூடிய நல்லோரிடமா, அல்லது சேரக்கூடாத பொல்லாரிடமாவென்று, அறிந்து - தெரிந்துக் கொண்டு, சேர் - நீ சேர்ந்து வாழக்கடவாய் என்பதாம். தீயரென்றும், நியாயரென்றும், நல்லோரென்றும், பொல்லா ரென்றும் வழங்கும்படி யானக் கூட்டத்தாரைக் கண்டாராய்ந்து நல்லோருடன் சேர்தலே நன்மக்களென்பதற் காதாரமாதலின் நியாயர்களையும், அன்பு மிகுத்தோரையும், தன்னவரன்னியரென்னும் பேதமற்ற மேன் மக்களையும், அடுத்து வாழ்கவேண்டியதே விவேக மிகுக்கக் கோறுவோர் குணமாதலின் சேரிடமறிந்துச் சேரவேண்டியதே சிறப்பாகும். நீதி வெண்பா நிந்தையிலா தூயவரும் நிந்தையச்சேரிலவர் நிந்தையது தம்மிடத்தே நிற்குமே நிந்தைமிகு தாலநிழற் கீழிருந்தான் றன்பாலருந்திடினும் பாலதனைச் சொல்லுவரோ பார். 51. சையெனத் திரியேல் சையென - கியானியென்று உன்னை மெச்சும் படியான வேஷம் பூண்டு, திரியேல் - நீயுலாவாதே என்பதாம். பாலி பாஷையில் ஸை என்னு மொழிக்கு ஞானமென் றும், ஸைலமென்னு மொழிக்கு ஞானக்குன்றென்றும், ஸைவமென்னு மொழிக்குத் தன்னை யறிதலென்றும், ஸையோக மென்னு மொழிக்கு ஞானபாக்கியம் அல்லது கியானவதிர்ஷ்ட மென்றுங் கூறியுள்ளபடியால் (ஸை) யெனக்கூறும் ஞானவான் போலும், மெளனி போலும் வேஷமிட்டுக் கொண்டு மற்றவர்களை வஞ்சித்தும் பொருள் பரித்து மண்ணுசை,