பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : இரண்டு 47 பெண்ணுசை, பொன் ைைச யற்றவர் போல் நடித்து மூவாசையும் முற்றப்பெருக்கி ஞானியெனத் திரிதல் யதார்த்த ஞானிகளை இழிவுபடுத்துதற் கேதுவாகத் தோற்றலால் ஸை யெனத் திரியேலென்று சத்திய நிலையை விளக்கியுள்ளாள். மேருமந்திர புராணம். சித்தமெய் மொழிகளிற் செரிந்துயிர்க் கெலா மித்திரயை பின் வேததிையி லொத்தெழு மனத்தன யுவகையுள்ளூலாயத் தத்துவத் தினன் றனுவைவாட்டின்ை. 52. சொற் சோர்வுபடேல் சொல் - ஒருவர்க்குச் சொல்லிய வுருதிவாக்கியத்தில், சோர்வு - தவறுதல் வுண்டாகும்படி, படேல் - செய்துக் கொள்ளாதே. ஒருவருக்குப் பொருளளிப்பேன் வாவென்று கூறியும், அன்னமளிப்பேன் வாவென்று கூறியும் அவன் வந்த பின்பு சொல்லிய சொற்றவருமாயின் மிக்க அவாவால் நாடிவந்தவன் மனங்குன்றி நாணடைந்து போவான். அவ்வகையா லவன் மனங்குன்றிப் போவ திலுைம் அவனுக்குக் கொடுப்பே னென்று சொல்லிய வாக்கைச் சொல்லாமலிருப்ப தழகாகும். ஒருவனுக்கு அவா மிக்கச் சொல்லி அச்சொல் சோர்வுபடு மாயின் அதனினும் வாய்ப்பொய் வேறில்லை யெனவுணர்ந்த ஞானத்தாய் தேகசோர்வினும் சொற்சோர்வுபடேலென்று வற்புறுத்திக் கூறியுள்ளாள். 53. சோம்பித் திரியேல் சோம்பி - ஒரு தொழிலுஞ் செய்வதற்கியலாதவனய், திரியேல் - உலாவாதே யென்பதாம். அதாவது ஒர் தொழிலுக் குதவாதவனாகவும், ஒர் வித்தைக் குதவாதவனாகவும் சோம்பேறி திரிவானுயின் விவேகிக ளவனை சீவ அசீவ மிரண்டினுங் கடையாக மதிப்பர்.