பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 க. அயோத்திதாஸ்ப் பண்டிதர் விவேக சிந்தாமணி கருதியநூல் கல்லாதான் கசடகுைம் கணக்கறிந்து பேசாதான் மூடகுைம் ஒரு தொழிலு மில்லாதான் முகடியாகும் வொன்றுக்கு முதவாதான் சோம்பணுகும் பெரியோர்கண் முன்னின்று மரத்தைப் போல பேசாமலிருப்பவனே பேயணுகும் பரிவு சொல்லி தழுவுபவன் பசப்பனுகும் பசிப்பவருக் கிட்டுண்ணுன் பாவியாமே. 54. தக்கோ னினத்திரு தக்கோன் - எடுக்குங் காரியங்களை முடிக்கத்தக்கவனது, இனத்து - கூட்டுறவில், இரு- நீசேர்ந்திருக்கக்கடவா யென்பதாம். ஒர் சபையி லெழுந்து பேசுவதற்குத் தக்கவன் ஒர் சுபகாரியாதிகளை முடிப்பதற்குத் தக்கவன் நீதிநெறிகளைப் போதிப்பதற்குத் தக்கவன் நடுநிலையிலும், நியாயவாயலிலும் பேசுவதற்குத் தக்கவன், எடுத்த காரியங்களை எவ்விதத்திலு முடிக்கத் தக்கவனென்று பலருஞ் சொல்லும்படியாக வீற்றிருப் பாயிைன் அவனைக் கொண்டே சகல சீர்திருத்தங்களை முடித் துக் கொள்ளுவதுடன் மற்றவர்களும் தக்கவனென்னு மேறை நடந்து சுகம் பெறுவார்கள் என்பது மெய்யானதால் அப்படிப் பட்டவனை யணுகி நீயும் தக்கோனென விளங்குவாய் என்று கூறியுள்ளாள். திரிக்குறள் தக்கா ரினத்தனுய்த் தானெழுகு வல்லானைச் செற்ருர் செயக்கிடந்த தில். 55. தானமது விரும்பு தானம் - ஈகையாம், அது - அச்செயலை, விரும்பு - நீ ஆசைக்கொள்ளும். அன்பு மிகுத்தோரிடத்து ஈகை மிகுத்திருப்ப தியல் பாதலின் ஈகையிருக்கு மிதக்கத்தால் எல்லா சுகமுந்தோன்று மென்பது துணிபு.