பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : இரண்டு 49 இத்தகைய தானத்துள் உத்தமதான மென்றும் மத்திம தானமென்றும், அதம தானமென்றும் மூன்று வகைப்படும். இவற்றுள் உத்தம தானமாவது மெய்ப் பொருளை விரும்பும் மேன்மக்களாகவும், முக்குற்றங்களை யகற்றும் மூதறி வாளரா கவும் விளங்குவோரைக் கண்டு அவர்களெடுத்துள்ள முயற்சியை முடிக்கத்தக்க வுதவியாம் தானஞ்செய்து வருதலே உத்தமதான மென்னப்படும். முன்கலதிவாகரம் அறத்திற்ைறியவரும் பெரும் பொருளை புறத்துறைக் குற்ற மூன்றறுத்த நற்றவற்கு கொள் கெனப் பணிந்து குறையிரந்த வர்வயி னுள்ள மூவந்தீவ துத்தம தானம். திக்கற்று மிக்க மெலிந்து யேழைகளுக்கும், குருடர்களுக் கும், ஊமெகளுக்கும், தொழில் செய்ய சக்தியற்ற அங்கவீன ருக்கும் செவிடர்களுக்கு மீவது மத்திமதான மென்னப்படும். ஆதுலர்க்கந்த கரும ருறுப்பிலிகள் செவிடர்க்கீவது மத்தியதானம். . சகலருமறியக் கூச்சலிட்டளிப்பதும், கீர்த்தியாம் புகழ்வேண்டுமென்றளிப்பதும், நம்மெய் லோபியென்று சொல்லுவார்களென பயந்தளிப்பதும், ஒரு பலனைக் கருதியளிப் பதும், பிரபுவென்று பலர் சொல்லும்படி யளிப்பதும், பார்ப்போர் மெச்சும்படி யளிப்பதும் ஒருவர் கேட்டுக் கொண்டதின்பேரி லளிப்பதும் அதமதானமென்று கூறப்படும். ஆர்வம் புகழே, யச்சங், கைம்மாறு, காரணங் கண்ணுேட் டம் கடப்பாடென்றிவை ஏழுங்கடைபடு வதமதானம். இத்தகைய மூவகை தானத்தில் உலக சீர்திருத்தத்திற்கும் மக்கள் சீர்திருத்தத்திற்கும் ஆதியாக விளங்கி புலன் தென்பட நோக்கும் தென்புலத்தோராகும், சமண முநிவர்களுக் கீவதே உத்தமதாநமாதலின் அதன் சாதனங்களா லுணர்ந்த ஒளவையும் தானமது விரும்பு என்று வற்புறுத்திக் கூறியுள்ளாள்.