பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : இரண்டு 55 இத்தகைய சீலத்தோருடன் ஒத்து வாழ்க வேண்டு மென்பது அம்மன் கருத்தேயன்றி நீதிநெறி கெட்டு அவன் பெரிய சாதி, இவன் சிறிய சாதியென்போருடனும், அவன் சாமி பெரிய சாமி, இவன் சாமி சின்ன சாமியென்போருடனும் ஒத்துவாழ்க வேண்டுமென்னுங் கருத்தன்று. நீதியும், நெறியுமமைந்த தேசம் சீரும் சிறப்புமடையுமேயன்றி, அநீதியும் அறநெறியும் அமைந்த தேசம் ஒரு காலும் சீரும், சிறப்பு மடையப் போகிறதில்லை. ஆதலின் சீலமாம் நீதி நெறியமைந்த தேசத்தோருடன் ஒத்து வாழ்க வேண்டுமென்பது துணிபு. பழமொழி விளக்கம். தேரோடுமணிவீதி தண்டலையார்த் திருவமைந்த தேசமெல்லாம் பேரோடும்படைத்த வீராதி வீரனெனும் பெரியோனேனும் நேரோடும்.உலகத் தோடொன்றுபட்டு நடப்பதுவே நீதியாகும் ஊரோடவுடனேடி நாடோட நடுவோட லுறுதிதானே. நீதிநெறியாம் நேர்வழியில் ஊரோட வுடனேடலும், நாடோட நடுவோடலும் சுகநிலையுறுதி தருவதாகும். 62. தையல் சொற்கேளேல். தையல்-கொடுரமாம், சொல்-வார்த்தைகளை, கேளேல்செவி கொடாதே என்பதாம். எதிரியால் உன்னைத் தைக்கக்கூறு மொழிக்கு, செவி கொடுப்பாயாயின் கோபமீண்டு அவனுடன் போர்செய்ய நேரும் அதல்ை துக்கம் பெருகும். ஆதலின் எதிரி தையல் சொற்களுக்கு செவி கொடாதிருக்க வேண்டுமென்பது கருத்து. அதாவது, குத்திக்குற்றி யிழுக்குங் கொடுரச் செயலுக்குத் தைத்தலென்றும், பனியின் கொடுரத்தால் இலையுதிரு மாதத்திற்குத் தைமாதமென்றும்; கொடுர நெய் கலந்த வஸ்துக் களுக்குத் தைலமென்றும், புண்பட யிதயத்தில் தைக்கக்கூறும் கொடுர வார்த்தைக்குத் தையல் மொழியென்றுங் கூறப்படும். அன்னியற்ை புண்படக்கூறுந் தையல் மொழியாங் கொடுர வார்த்தையை செவியிற் கேட்டவுடன் கோபமீறும். அக்கோபத்தால் ஒருவருக்கொருவர் கைகலக்குந் தையலுண் டாம். அத்தைய லால் துன்பம் பெருகி மாளா துக்கத்திற்