பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 க. அயோத்திதாளமப் பண்டிதர் காளாக்கிவிடும். ஆதலின் எதிரிகளாற் கூறுங்கொடுர சொற்களை கேளாதிருப்பதே சுகமென்றறிந்த ஞானத்தாய் தையல் சொற்கேளேலென்று வற்புறுத்தித் கூறியுள்ளாள். 63. தொன் மெய்மறவேல். தொல்-பூர்வ, மெய்-தேகிகளாம் பழமெயாங் குடும்பத் தோரை, மறவேல்-என்றும் மறவாதே என்பதாம். வாழையடி வாழைபோல் தொன்று தொட்டு தோன்றி வரும் பழ மெய் தங்கிய குடும்பத்தோரை மறவாதிருக்க வேண்டுமென்பது கருத்து. தொன்றுதொட்டு வழங்கிவரும் பூர்வ குடும்பத்தோரை மறவாமலிருப்பதிலுைண்டாகும் விருத்தியும், மறப்பதிலுைண்டாகுங் கேடும் யாதென்பீரேல். தொன் மெய் மறவாச் செயலால் குடும்பம் விருத்தி யடைந்து அவர்களுக்குள் விவேக விருத்தியடைந்தோர் சார்பால் முக்குடும்பத்தோர் சுக விருத்தியும், ஞானமும் பெறுவதுடன் பின் குடும்பத்தோரும் விருத்தியினின்று சுகவாழ்க்கைப் பெறுவார்கள். தொன்மெயாம் பூர்வசுற்றத்தோரை மறந்து பற்றற்ற வரைப் போல் நடித்தல்முன் குடும்பத்தோர் தோற்றமும், சேர்க்கையும் மறைந்து போவதுடன் பின் சந்ததிகளும் விருத்தியின்றி பாழடைந்துபோம். திரிக்குறள். பற்றற்றே மென்பார் படிற்ருெழுக்க மெற்றெற்றன் றேகம் பலவுந் தரும். 64. தோற்பனை தொடரேல். தோற்பனை-உன்னல் முறியடிக்கப்பட்டோனை, தொட ரேல் - பின்பற்றிச் செல்லாதே என்பதாம். வில்லால் தோற்றவனுக்கும், வித்தையால் தோற்ற வனுக்கும் உள்ள விரோதம் எதிரியை யெவ்வகையேனும் ஜெயிக்குமளவும், உள்ளனவாதலின் அத்தகைய தோற்பனைத் தொடர்ந்து செல்லுவதில்ை எத்தகையுந் துன்பமுண்டா