பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : இரண்டு 57 மென்றுணர்ந்த ஞானத்தாய் தோற்பனைத் தொடரேலென்று வற்புறுத்திக் கூறியுள்ளாள். இவற்றுள் தோற்பன தோடரே, லென்னும் பாட பேதமு முண்டு. தோற்ற வியாஜியத்தை தொடர்ந்தும் ஜெயித்த தனந்த முண்டு. தோற்ற யுத்தத்தை விடாமுயற்சியாற் ருெடுத்து ஜெயித்தயுத் தங்களும் அனந்தமுண்டு. ஆதலின் தோற்பனை தொடறே லென்னும் வாசகமேயன்றி தோற்பன தொடரே லென்னும் வாசகமன்று. ஒர் வியாஜியத்திலேனும் யுத்தத்திலேனும், வாக்கு வாதத்தி லேனும் அபஜெயமடைந்தோனின் உள்ள வஞ்சினத்தையும் பொருமையையு முணராது மித்துருவென்றெண்ணி தோற்ற வனைத் தொடர்வதாயின் கேடுண்டென்பது கருத்தாம். 65. நன்மெய்க் கடைபிடி. நல்-நல்ல, மெய்-தேகி, நற்றேகி, நல்லவன் என உலகோர் சொல்லுஞ் செயலை, கடைபிடி-முடிவாய பாக்கியமென்று பற்றுமென்பதாம். உலகத்தோரால் நல்லவன், நன்மார்க்கன், நற்குணத் தோன், நற்புத்திரன், என்று சொல்வதற்கேதுவாம் நன் மெய்யைத்தோற்றி வைப்பான் வேண்டி நன்மெய்க் கடைபிடி யென்று, இரண்டாவது பேதவாக்கியத்தைக் கூறியுள்ளாள். அதாவது பொய்ச் சொல்லாமெய், பிறர்மனை நயவாமெய், களவு செய்யாமெய், கள்ளருந்தாமெய், கொலை செய்யாமெய் ஆகிய சுத்த தேகிகளாக வாழ்தலே நன்மெய்க்கடை பிடித்த லென்று கூறத்தகும், நல்வாய்மெய் நல்லூக்கம் நற்சாட்சியுடைய நன்மையாம் சுத்த தேகியாக வாழ்தலே நிர்வாணத்தின் சுருக்க பாதையுமாகும். 66. நாடொப்பன செய். நாடு-நாட்டோர் நன்செய் புன்செய் பூமியின் செயலுக்குரியோர், ஒப்ப-அவர்கள் சம்மதிக்கும் படியான செயலை, செய்-நீ செய்யக் கடவாய் என்பதாம்.