பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 க. அயோத்திதாஸ்ப் பண்டிதர் அதாவது - நாடென்றும், நகரமென்றும், பிரித்துள்ள இரு வகுப்பார்க்குள், நகரவாசிகள் யாவரும் அரசனது செங்கோ லுக்குள் அடங்கி வாழ்தல்போல் நாட்டு வாசிகள் யாவரும் வேளாளத் தொழிலாம் ஏரடிக்கும் கோலுக் கொப்பி வாழ்க வேண்டுமென்பது கருத்தாம். அஃது யாதென்பீரேல் பூமியை உழுதுண்போம்ை வேளாளனுக்கு ஏரும், மாடும் இல்லாவிடில் மற்றவனிடம் ஒப்பி உதவிபுரிதலும், நீர் வாய்க்காலின் ஒழுக்குகளை ஒருவன் பூமிக்குப் பாய்ந்தபின் மற்றவன் பூமிக்கு ஒப்பிப் பாய விடுதலும் ஆகிய சர்வ மேழிச் செயலையும் கோழைப்படாது செய்தற்கு நாடொப்பச் செய்தலே நலமாகும். நாடொப்பாது ஒருவன் ஏரிக்கால் நீர் பாய்ச்சுமுன் மற்ருெரு வன் பாய்ச்சுதலும், ஒருவன் மேழி முடியுமுன் மற்ருெருவன் ஏரைப் பிடித்தலு மாகிய ஒப்பாச் செயலைச் செய்தல், நாட்டுக்குக் கேட்டை விளைவிக்குஞ் செயலாதலின் உழவோ ராம், நாட்டோர் நாடொப்பனச் செயல் வேண்டுமென வற்புறுத்திக் கூறியுள்ளாள். 67. நிலையிற் பிரியேல். நிலையில் - கியான விழிப்பினின்று, பிரியேல் - நீ நழுவாதே என்பதாம். அதாவது தோற்றும் பொருட்கள் யாவும் கெடு வ தியல்பாதலின் அத்தோற்ற நிலையிலும் அதன் அவாநிலையிலும் நில்லாது உண்மெய் உணரும் சுழிமுனை நிலையைப் பிரியெ லென்பது கருத்தாம். குருவருளாற் காட்டிடு நிலையும் அந்நிலையே யாம். அகஸ்தியர். விழித்துமிக பார்த்திடவே பொரிதான் வீசும் முச்சந்தி வீதியிலே தீபந் தோன்றும் சுழித்தியிலே போகாது ஒருமனதாய் நின்ருல் சுத்தமென்ற நாதவொலிக் காதிற் கேழ்க்கும் இழுத்ததென்று நீகூடத் தொடர்ந்தாயானல் எண்ணெண்ணு பிறப்பிறப்பு எய்தும் பாரும் அழுத்திமன கேசரத்தில் நின்று மைந்தா அப்பனே லலாடத்தில் தூங்கு வாயே.