பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : இரண்டு 59 ஞானக்குறள். ஈரொளி யீதென் றிறைவ னுரைத்தனன் நீரொளி மீது நிலை. மயிர்முனையிற் பாதி மனத்தறி வுண்டேல் அயிர்ப்புண்டங் காதி நிலை. அழியும் நிலையைப்பற்றி நிற்பது அழுகைக்கும் பற்கடிப் பிற்கும் ஆதாரமாதலின், அத்தகைய துக்கத்தையகற்றுவான் வேண்டி அழியா நிலையாம், உள்விழிநோக்க நிலையிற் பிரியே லென்று கூறியுள்ளாள் . 68. நீர்விளை யாடேல். நீர்-பங்குனி பருவத்தில் ஜலத்தால், விளையாடுவிளையாட்டை, ஆடேல்-நீவிளையாடாதே யென்பதாம். அதாவது பூர்வ காலத்தில் சித்தார்த்தியார் காமனையுங் காலனையும் வென்ற பங்குனிமாத பருவத்தில் பெளத்தவர சர்களும், குடிகளும் ஒன்றுகூடி பெண்களும் புருடரும் நீர் விளையாடுவதும் காமன் பண்டி கைக் கொண்டாடுவதும் வழக்கமாகும். அத்தகைய விளையாட்டினல் மதிமயங்கி பெண்களின் கற்பு நிலை தவறுதலும், புருஷர்கள் பஞ்சவிரதங் கெடுதலு மாகிய நீர் விளையாட்டை சத்திய சங்கத்தோர் தடுத்துள்ளது மன்றி அம்மனும் அவ்விளையாட்டைக் கண்டித்திருக்கின்ருள். அது கண்டே சருவதேச பெளத்தர்களும் நீர்விளை யாட்டை நீக்கிவிட்டபோதிலும் மார்வாடிகளும் குஜிராத் தியரும் பெண்களை நீக்காமலும், நீக்கியும் புருஷர்கள் அந்நீர் விளையாட்டை நாளது வரையில் விளையாடி வருகின்ருர்கள். பூர்வம் புருஷர்களும் பெண்களும் அந்நீர் விளையாடுவதின லுண்டாகுங் கேடுகளை யுணர்ந்த ஞானத்தாய் நீர்விளையாடே லென்று காமன் விழாவையே கண்டித்திருக்கின்ருள்.