பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : இரண்டு Ꮎ 7 84. பையலோ டிணங்கேல். பையல்-பரியாசமாம் சிறு சேஷ்டை, ஒடு-உள்ளவர் களுடன், இணங்கேல்-சேராதே என்பதாம். அதாவது, மக்களுரு வமைந்தும் குரங்கு சேட்டையுள்ளவர் பாலினங்கிடில் விவேக விர்த்திக்கு தக்க வார்த்தைகளும், செயலுமின்றி களியாட்டுங் கலகமும், பெருகி வீணே மனத் தாங்க லுண்டாகும். அதல்ை வித்யாபுத்தி விருத்திக் குறைந்து வீணே அல்லலடைவார்க ளென்றரிந்த ஞானத்தாய் பரியாசக் காரரை யணுகலாகாதென்னுங் கருத்துடன் பையலோ டிணங்கேல் என்று கூறியுள்ளாள். 85. பொருடனை போற்றிவாழ். பொருள்-மெய்ப்பெருள், தனை-தன்னை, போற்றி-சிந்தித்து, வாழ்-வாழக்கடவா யென்பதாம். தன்னைத்தா னுணரென்னுந் தனக்குள்ள நற்செயல் களையுந் துற்செயல்களையு முணர்ந்து தனக்கொரு கேடும் வராது துற்செயல்களை யகற்றி நற்செயல்களைப் பெருக்கி சுகநிலையாம் உண்மெய்ப் பொருளுணர்ந்து நிற்றலே நித்திய வாழ்க்கைக் காதாரமாதலின் கூடினத்திற்கு கூடிணம் அழிந்துகொண்டே போகும் பொய்ப் பொருளை போற்ருது நித்திய ஒழுக்கமாம் நீடு வாழ்க்கை யைத்தரும் மெய்ப் பொருளைப் போற்றி வாழென்று கூறியுள்ளாள். திரிக்குறள். பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரு மருளான மானப் பிறப்பு. எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினு மப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. 86. போர்த்தொழில் புரியேல். போர்-எக்காலும் வாது வழக்குக் கேதுவாம், தொழில்கன்மங்களை, புரியேல்-நீ செய்யாதே என்பதாம். ஒர் தொழிலை யாரம்பிக்குங்கால் அத னேது கொண்டு எக்காலமும் வாது வழக்கை யுண்டு செய்யுங் கன்மத்தை புரியாதே யென்று கூறியுள்ளாள்.