பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮾ Ꮾ க. அயோத்திதாஸப் பண்டிதர் ஏரெழுபது. வெங்கோபகலிக்கடந்த வேளாளர் விளைவயலுள் பைங்கோல முடிதிருந்த பார்வேந்தர் முடிதிருந்தும் பொங்கோதை களியான போர்வேந்தர் நடத்துகின்ற செங்கோலைத் தாங்குங்கோ லேரடிக்குஞ் செங்கோலே 82. பெரியாரைத் துணைக்கொள். பெரியாரை - வித்தையிலும் புத்தியிலும் ஈகையிலும் சன்மார்க்கத்திலும் மிகுந்த மேன்மக்களை, துணைக்கொள் - வுதவி பற்றி நில்லு மென்பதாம். மக்களுள் மூர்க்கர்கேண்மெயால் கோப லாபமும், காமிய மிகுதியால் பிணியின் லாபமும் பெற்று துன்புறுவது அநுபவ காட்சி யாதலின் அவிவேகிகளை யணுகாது விவேகிகளை அணுகவேண்டுமென்று கூறியுள்ளாள். நீதிவெண்பா. அரிமந்திரம்புகுந்தா லானே மருப்பும் பெருங்கொளிசேர் முத்தும் பெறலாம் - நரிநுழையில் வாலுஞ் சிறிய மயிரெலும்புங் கத்தபத்தின் தோலுமல்லால் வேறுமுண்டோ சொல். 83. பேதமெயகற்று பேத-பலவகைக் குணங்களும் பலவகைக் செயலு மமைந்த மெய்-நிலையற்ற தேகியென்று பிறர் சொல்லுஞ் செயலை, அகற்று - நீக்கிக்கொள்ளுமென்பதாம். பேதமாகிய நிலையற்ற குணங்களும், நிலையற்ற செயலு மமைந்தவரென்று மற்றவர் காண்பாராயின் எத்தொழிலு மிணங்க விடாமலகற்றி விடுவார்கள். அவற்ருல் பலவகை இடுக்கண்களுண்டாகி துக்கம் பெருகிப்போம் ஆதலின் உமக்குள்ள பேதகுணத்தை யகற்று மென்பது கருத்தாம். திரிக்குறள். நாணுமெய் நாடாமெய் நாரின்மெய் யாதொன்றும் பேணுமெய் பேதை தொழில்,