பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : இரண்டு 65 வேதாந்தத்தாலும் பொய் பொருளாசையாலும் புசிப்பையகற்றி தேகத்தின் பீடுரையாது வொடுக்கிப் பாழடைவார்களென் றுணர்ந்து பீடுபெற நில்லென்று கூறியுள்ளாள். 80. புகழ்ந்தாரைப் போற்றிவாழ். புகழ்ந்தாரை-மற்றவர்களால் புகழத்தக்க பெரியோர்களை போற்றியும் துதிசெய்து கொண்டாடி, வாழ்-வாழக்கடவா யென்பதாகும். அதாவது வித்தையில் மிகுந்தப் பெரியோரென்றும் புத்தியில் மிகுந்த பெரியோரென்றும், ச்கையில் மிகுந்த பெரியோரென்றும் சன்மார்க்கத்தில் மிகுந்த பெரியோரென் றும் புகழ்ந்து அவர்களை போற்றி வாழ்வது ஒழுக்க மிகுத்த வுலகத் தோர் சுவாபமாகும் அவற்றைக் கொண்டொழுகும் நீயும் அவ்விவேக மிகுந்த புருடர்களைப் போற்றி வாழக்கடவா யென்பதாகும். அத்தகைய விவேக மிகுத்த மேன்மக்களாம் பெரியோர்களைப் போற்றி வாழ்தல் அவர்களது வித்தியா விருத்தியின் செயலும், புத்திவிருத்தியின் செயலும் ஈகை விருத்தியின் செயலும் சன்மார்க்கவிருத்தியின் செயலுந் தங்களுக்கு விளங்கும் மற்ற பின் சந்ததியோர்களால் தாங்களும் போற்றத்தக்க வாழ்க்கை பெறுவார்கள். ஆதலின் ஒழுக்க மிகுத்தோரால் புகழத்தக்கப் பெரியோர்களை நீயும் போற்றி வாழென்று கூறியுள்ளாள். 81. பூமிதிருத்தியுண். பூமி-உனது நிலத்தை, திருத்தி-கல் காடுகளைப் போக்கிப் பயிர் செய்து, உண்-நீ புசிக்கக்கடவா யென்பதாம். அதாவது, சகல தொழிலிலும் பூமியைத் திருத்தி உண்ணும் வேளாளத் தொழிலே விசேஷித்ததாகும். எவ்வகையி லென்னில் மகாஞானிகள் அரசர்கள் முதல் ஜீவராசிகளிராக அன்ன மூட்டி ஆதரிக்கும் தொழிலாகலின், பூமியின் பலனை போதித்துள்ளாள்.