பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 4. க. அயோத்திதாஸப் பண்டிதர் பரவி நஞ்சமைந்து விடுவதுடன் நசிந்தும் போகின்ருன். ஆதலின் நஞ்சுள்ள ஜெந்துக்ளுடன் பழகலாகா தென்பது கருத்து. 78. பிழைபடச் சொல்ல்ேல். பிழை - குற்றம், பட-உண்டாகச் சொல்லேல் - பகராதே யென்பதாம். அதாவது துஷ்டர்கள் தங்களுக்குள் வன்னெஞ்சங், குடிகெடுப்பு, பொருமெய், நீச்சச் செயல் முதலியன நிறைத்துக் கொண்டு குற்றமற்றப் பெரியோர்களைக் கண்டவுடன் வெகுண்டு தங்களது நீச்சகுணச் செயலா லவர்களைப் பிழை படக் கூறுவது சுவாபமாகும். அவ்வகைப் பெரியோர் களைப் பழித்தலால் அவர்களுக் குண்டாகும் மனத்தாங்கலின் கொதிப்பே பழித்தவனையும் பழித்தோன் குடும்பத்தோரையும் பாழாக்கும். ஆதலின் இதனந்தரார்த்தங் கண்ட ஞானத்தாய் பெரியோர்களைப் பிழைபடச் சொல்லேலென்று கூறியுள்ளாள். 79. பீடுபெற நில். பீடு-வல்லமெய், பெற-உண்டாகத்தக்க நிலையில், நில் நிற்கக்கடவா யென்பதாம். தேகமானது தக்க வலுவிலுள்ளவரையில் யாதொரு தொழிலுக்கும், முயற்சிக்குமஞ்சாது எடுத்த காரியங்களை முடிப்பதற் கேதுவானதன்றி பற்பல பிணிகளுந் தோன்றி வுபத்திரவஞ் செய்யாவாம். பீடு குறைந்த கால் எடுக்கும் முயற்சி களுஞ் சோர்வடைவதன்றி தேகத்திற் பற்பல வியாதிகளுந் தோன்றி வுபத்திரவத்தை யுண்டுசெய்யும். ஆதலின் ஒவ்வோர் மக்களுந் தங்களது தனங் குறையினும் தானியங் குறையினும் தேகபலங் குறையாது வாழ்தல் சுகநிலையாகும். சிற்றின்பப் பெருக்கத்தினல் தேகசக்தியைக் குறைத்துக் கொள்ளுவதும் பணம் சேர்க்கும் விஷயத்தால் புசிப்பைக் குறைத்து தேக சக்தியைக் குறைத்துக் கொள்ளுவதுமான அனுபவமறியா பொய் வேதாந்த வேஷத்தால் தேக சக்தியைக் குறைத்துக் கொள்ளுவதும் உள்ள வழக்கமாதலின் திரிகாலச் செயலு முனர்ந்த ஞானத்தாய் பொய் விரதங்களாலும் பொய்